குழந்தைகளுக்கு உடனடியான அதே நேரத்தில் விரைவான ஸ்நாக்ஸ் ரெசிபிகளை அடிக்கடி நீங்கள் தேடி இருக்கலாம். அப்படி ஒன்றுதான் இந்த பிரட் சீஸ் பைட்ஸ். இதனை ஒரு முறை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துவிட்டால் இனி இதுதான் உங்கள் குழந்தையின் ஃபேவரட்டான ஸ்நாக்ஸ் ஆக இருக்கப்போகிறது. இந்த பிரட் சீஸ் பைட்சை செஸ்வான் சாஸ் அல்லது கிரீன் சட்னி உடன் சாப்பிட்டு மகிழலாம். இப்போது இந்த பிரட் சீஸ் ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்பதை படிப்படியாக பார்க்கலாம்.
*பிரெட் சிஸ் பைட்ஸ் செய்வதற்கு முதலில் இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பிரட் என்று சொல்லும் பொழுது வெள்ளை அல்லது பிரவுன் பிரெட் ஆகிய இரண்டில் எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
*இப்போது ஒரு பிரெட் துண்டில் இரண்டு சீஸ் ஸ்லைஸ்களை வைக்கவும். சீஸ் ஸ்லைஸ் கிடைக்காவிட்டால் நீங்கள் சீஸை துருவி சேர்க்கலாம் அல்லது பிரெட் மீது தடவலாம்.
*இப்போது சீஸ் வைத்த பிறகு அதன் மீது மற்றொரு பிரெடை வைக்கவும்.
*அடுத்து பிரெட்டை 6 துண்டுகளாக சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளுங்கள்.
*இப்பொழுது ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு சோள மாவு எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
*பிரெட்டை இந்த சோள மாவு தண்ணீரில் முக்கி எடுக்கவும்.
இதையும் படிக்கலாமே: உங்க சருமம் எப்போதும் இளமையாவே இருக்க நைட்டைம் ஸ்கின்கேர்ல இதையும் சேர்த்துக்கோங்க!!!
*அதே நேரத்தில் ஒரு தட்டில் பிரட் தூளை பரப்பி வைத்து சோளமாவில் முக்கி எடுத்தவுடன் மீண்டும் இந்த பிரெட் தூள் மீது பிரட்டவும்.
*இவ்வாறு ஒவ்வொரு துண்டையும் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
*அனைத்து துண்டுகளையும் கோட்டிங் செய்த பிறகு இதனை பிரிட்ஜில் 30 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து விடவும்.
*இப்போது கடாய் ஒன்றை அடைப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கி தயார் செய்து வைத்துள்ள துண்டுகளை சேர்த்து இரண்டு பக்கங்களும் கோல்டன் பிரவுன் ஆகும் வரை பொரிக்கவும்.
*பிறகு இதனை கெட்சப்புடன் பரிமாறலாம்.
இதற்கு சீஸ் மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான உருளைக்கிழங்கு, கேரட், குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், வெங்காயம் போன்ற காய்கறிகளையும் சேர்க்கலாம். மேலும் விருப்பப்பட்டால் நீங்கள் பிரெட் துண்டுகளை எண்ணெய்க்கு பதிலாக வெண்ணையில் பொரித்தெடுக்கலாம். இதனை சூடாக சாப்பிடுவது சிறந்தது.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.