செட்டிநாடு ஸ்பெஷல் சுவையான சீனி பணியாரம்!!!

Author: Hemalatha Ramkumar
24 December 2024, 7:28 pm

திடீரென்று அவசரமாக ஏதாவது ஒரு தின்பண்டம் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போது மூளையை போட்டு குழப்பிக் கொள்ளாமல் உடனடியாக இந்த செட்டிநாடு சீனி பணியாரம் செய்து கொடுங்கள். இதனை மிக எளிதாக செய்துவிடலாம். அதே நேரத்தில் சுவையாக இருக்கும். இதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் அரைத்து மாவை தயார் செய்து விட்டால் உடனடியாக பணியாரத்தை செய்துவிடலாம். இப்போது செட்டிநாடு ஸ்பெஷல் சீனிப் பணியாரம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1கப்

சர்க்கரை – 3/4 கப்

வெள்ளை உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் – 1/2 கப்

உப்பு – ஒரு சிட்டிகை

பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை

செய்முறை

இந்த சீனி பணியாரம் செய்வதற்கு முதலில் நாம் அரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பச்சை அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தோல் நீக்கிய வெள்ளை உளுந்து சேர்த்து 3 முதல் 4 முறை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி விட்டு, பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும். 

அரிசியும், உளுந்தும் ஊறிய பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இதனை அரைப்பதற்கு அதிக தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அரிசியை ஊறவைத்த தண்ணீரை சிறிதளவு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம். மாவை அரைத்த பிறகு அதே மாவோடு மிக்ஸி ஜாரில் 3/4 கப் சர்க்கரை, 1/2 கப் துருவிய தேங்காய், வாசனைக்காக 2 ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படிச்சு பாருங்க:  கண்ணாடி போன்ற சருமத்திற்கு அரிசி மாவு, தயிர் ஃபேஷியல்!!!

இந்த மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது கடாயை அடுப்பில் வைத்து இந்த பணியாரத்தை சுட்டு எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் ஒரு கரண்டியில் நாம் தயாரித்து வைத்துள்ள மாவை எடுத்து பணியாரத்தை ஊற்றி மிதமான தீயில் ஒவ்வொன்றாக பொரித்து எடுக்க வேண்டும். 

நீங்கள் ஒரு குழி கரண்டி அளவு மாவை ஊற்றினால் சரியாக இருக்கும். ஊற்றியவுடன் பணியாரம் நன்றாக உப்பி மிதந்து வரும். அந்த சமயத்தில் பணியாரத்தை திருப்பி போட்டு வேகவைத்து கோல்டன் பிரவுன் நிறமானதும் எடுத்து விடலாம். இதற்கு சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் வெல்லத்தையும் சேர்த்து செய்யலாம். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் சீனி பணியாரம் இப்போது தயார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?