காபி என்பது பலருக்கு தவிர்க்க முடியாத ஒரு காதலாக இருந்து வருகிறது. அருமையான வாசனை, ஃப்ளேவர் மற்றும் சுவை காரணமாக காபி குடித்த உடனேயே ஒரு கடினமான நாளையே சமாளிக்கும் அளவுக்கு நமக்கு ஆற்றல் கிடைக்கிறது. பலர் அடிக்கடி நாள் முழுவதும் காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்வது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் முதல் தூக்க கோளாறுகள் வரை அடிக்கடி காபி குடிக்கும் பழக்கத்தால் ஏற்படுகிறது. ஆனால் இந்த விஷயம் தெரிந்திருந்தும் பலரால் காபி குடிப்பதை கைவிட முடிவதில்லை. எனவே உங்களுக்கு பிடித்தமான காபியை ஆரோக்கியமான ஒன்றாக மாற்றுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதற்கு ஒரு அட்டவணையை பின்பற்றவும்
ஒருவேளை நீங்கள் காபிக்கு அடிமையாக இருந்தால் நீங்கள் எத்தனை கப் காபி குடிக்கிறீர்கள் என்பதை தெரியாமலேயே நீங்கள் குடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே காபிக்கு அடிமையாகி இருப்பதை தவிர்ப்பதற்கு நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு காபி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதற்கு ஒரு எண்ணிக்கையை பின்பற்றுங்கள். அது தெரிய வந்துவிட்டால் காபியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விடலாம்.
சர்க்கரை இல்லாத காபி
காபியில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக ஸ்டீவியா, கருப்பட்டி, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றை நீங்கள் சேர்க்கலாம். அது மட்டுமல்லாமல் காபியில் சாக்லேட் சிரப் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் அது ஆரோக்கியமாற்றதாக கருதப்படுகிறது. உங்களுடைய காபியில் இனிப்பு இல்லாத கோக்கோ பவுடர் அல்லது டார்க் சாக்லேட் போன்றவற்றை சேர்ப்பதன் மூலமாக அதன் ஃப்ளேவரை அதிகரிக்கலாம்.
காபி குடிக்கும் நேரம்
ஒருபோதும் மாலை நேரத்திற்கு பிறகோ அல்லது படுக்கைக்கு செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு காபி குடிக்க வேண்டாம். வழக்கமாக மாலை நேரங்களில் காபி குடிப்பது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். மேலும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
உங்களுடைய காபி கப்பை மாற்றவும்
ஒருவேளை நீங்கள் பெரிய காபி மக்கில் தினமும் காபி குடிப்பவர் என்றால் கட்டாயமாக உங்களுடைய காபி டம்ளரை சிறியதாக மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது நீங்கள் காபி குடிக்கும் அளவு குறைந்துவிடும்.
அதிக தரம் வாய்ந்த பொருட்கள் எப்பொழுதும் நீங்கள் வாங்கும் காபி பீன்ஸ் தரமானதாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். மேலும் குறைந்த கொழுப்பு பால் அல்லது பாதாம் பால் போன்ற வெஜிடேரியன் பாலை சாப்பிடவும். நீங்கள் பால் இல்லாமல் காபி குடிப்பவர் என்றால் பிளாக் காபியை தேர்வு செய்யலாம். வீட்டில் பால் இல்லாத போது பால் பவுடர் பயன்படுத்துங்கள். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் பால் பவுடரில் சர்க்கரை அளவு அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிலர் காபியில் கிரீம் சேர்த்து சாப்பிடுவார்கள். அவ்வாறு செய்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.