வாழைப்பழ ஸ்மூத்தி: டேஸ்டான ஹெல்தி பிரேக்ஃபாஸ்ட்னா இதுதான்

Author: Hemalatha Ramkumar
18 December 2024, 7:42 pm

உங்களுடைய நாளை ஆரம்பிப்பதற்கு டேஸ்ட்டான அதே நேரத்தில் ஆரோக்கியமான ஒரு காலை உணவு வாழைப்பழ ஸ்மூத்தி. இந்த சுவையான பனானா ஸ்மூத்தி வாழைப்பழம், பால், பீனட் பட்டர் மற்றும் சாக்லேட் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இந்த பனானா மில்க் ஷேக்கை சாப்பிடலாம். இது உங்களுடைய பசியை கட்டுப்படுத்தி, நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. 

வாழைப்பழ ஸ்மூத்தி செய்வதற்கு நமக்கு நல்ல பழுத்த வாழைப்பழம் தேவைப்படும். தினமும் வாழைப்பழங்களை கடைகளில் வாங்க முடியாத பட்சத்தில் ஒரு முறை வாங்கிவிட்டு அதன் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி பேக்கிங் ஷீட்டில் வைத்து ஃபிரீசரில் வைத்து விடுங்கள். இதனை ஒரு இரவு முழுவதும் அல்லது 6 முதல் 8 மணி நேரம் ஃபிரீசரில் வைத்து விடலாம். 

வாழைப் பழங்கள் உறைந்த பிறகு அதனை ஜிப்-லாக் பையில் போட்டு பயன்படுத்தும் வரை நீங்கள் ஃபிரீசரிலேயே வைத்துக் கொள்ளலாம். ஃப்ரோசன் பனானா பயன்படுத்துவது ஸ்மூத்தியை திக்காகவும், கிரீமியாகவும் மாற்றும். இப்போது பனானா ஸ்மூத்தி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

ஒரு உறைய வைத்த வாழைப்பழம் 

சாக்லேட் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 1 ஸ்பூன்

சர்க்கரை –  2 டேபிள் ஸ்பூன் 

பால் – 1 கப்

செய்முறை

*பனானா ஸ்மூத்தி செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் உறைய வைத்த வாழைப்பழங்கள், உங்களுக்கு தேவையான அளவு பால், சாக்லேட் பவுடர் சேர்க்கவும். 

*சாக்லேட் பவுடர் இல்லாத பட்சத்தில் நீங்கள் பூஸ்ட், போர்ன்விடா போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது ஹாட் சாக்லேட் பவுடரையும் பயன்படுத்தலாம். 

*பிறகு இதில் இன்ஸ்டன்ட் காபி பவுடரை சேர்க்கவும். 

*பொருட்கள் அனைத்தும் நன்றாக கிரீமியாகும் வரை அரைத்துக் கொள்ளவும். 

*அவ்வளவுதான் திக்கான, கிரீமியான பனானா ஸ்மூத்தி பரிமாறுவதற்கு தயாராக உள்ளது. 

இதையும் படிச்சு பாருங்க: இந்த ஒரு பொருள் இருந்தா இனி தலைமுடியை ஸ்ட்ரெய்ட்டன் செய்ய காசு செலவு செய்யவே மாட்டீங்க!!!

*நீங்கள் விருப்பப்பட்டால் இந்த வாழைப்பழத்தோடு ஸ்ட்ராபெர்ரி, அவகாடோ போன்ற பழங்கள் மற்றும் பீடட் பட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!