மழைக்கு இதமா ஈவ்னிங் டைம்ல கெட்டி சட்னி கூட இந்த சேமியா அடைய சாப்பிட்டு பாருங்க… அட அட அட பிரமாதமா இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
14 November 2024, 10:53 am

எப்பொழுதுமே ஒரே மாதிரியாக காலை உணவை செய்து கொடுத்தால் செய்பவருக்கும் போர் அடித்து விடும், அதனை சாப்பிடுபவருக்கும் அலுத்துப் போய்விடும். எனவே சற்று வித்தியாசமாக அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை கொடுத்தால் சாப்பிடுபவர்கள் ஆசையோடு ஒரு கரண்டி கூடவே சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது சேமியா அடை. இந்த சேமியா அடையை காலை உணவாகவோ அல்லது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாகவோ நீங்கள் செய்து கொடுக்கலாம். இப்போது சேமியா அடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

சேமியா – 1 கப்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி தழை – சிறிதளவு

கடுகு – 1/4 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – 6 டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் – 1/4 கப்

வறுத்த வேர்க்கடலை – 10

இஞ்சி – ஒரு துண்டு

செய்முறை 

ஒரு கப் வறுத்த சேமியாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை உங்களிடம் வறுக்காத சேமியா இருந்தால் அதனை ட்ரை ரோஸ்ட் செய்து பயன்படுத்தவும். இதற்கு இடையில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் 1/4 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்க்கவும். 

கடுகு வெடித்தவுடன் 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். பிறகு ஒரு சிறிய கேரட்டை துருவி சேர்த்துக் கொள்ளலாம். 

இதையும் படிக்கலாமே: காதுகளுக்கு இயர் டிராப்ஸ் பயன்படுத்துவது சரியா…???

அடுத்து 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த கடலையை ஒன்றும் பாதியுமாக இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தழையை நறுக்கி சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும். சேமியா ஊறியவுடன் தண்ணீரில் இருந்து அதனை வடிகட்டி வேறு ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். 

பிறகு நாம் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இப்போது இதில் 6 டேபிள் ஸ்பூன் அளவு கடலை மாவு சேர்த்து கிளறவும். இப்போது கைகளில் எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தோசை கல்லில் அடையாக தட்டி எடுக்க வேண்டியது தான். கைகளில் செய்வதற்கு உங்களுக்கு சிரமமாக இருந்தால் ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி அடையாக தட்டி எடுத்து பிறகு தோசை கல்லில் போட்டு எடுக்கலாம். அடையை வேக வைப்பதற்கு நீங்கள் எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தலாம். இதற்கு கெட்டி தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

  • veera dheera sooran movie director express his worst feeling on delay release ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..