சிக்கன் பிடிக்காதுன்னு சொல்ற நான்வெஜிடேரியன் பார்க்குறது ரொம்ப கஷ்டம். இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் மசாலா ஃபிரைடு சிக்கன் ரெசிபி செய்வது மிகவும் சுலபம். இதனை சிக்கன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு, அதிக அளவு கொத்தமல்லி இலை, புதினா மற்றும் கறிவேப்பிலை கொண்டு செய்ய வேண்டும். இந்த தனித்துவமான ஃபிரைட் சிக்கன் ரெசிபி நிச்சயமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ
கொத்தமல்லி இலை – ஒரு கப்
புதினா இலை – ஒரு கப்
கறிவேப்பிலை – 1/2 கப்
பச்சை மிளகாய் – 8
இஞ்சி விழுது – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
புளிக்க வைக்காத தயிர் – 1/2 கப்
கரம் மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு– 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1/2 கப்
எண்ணெய் – பொரித்தெடுப்பதற்கு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
*முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
*இந்த மசாலாவை ஒரு அகலமான கிண்ணத்தில் மாற்றி அதனோடு தயிர், உப்பு, எலுமிச்சை சாறு, கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
*இந்த மசாலாவில் சுத்தம் செய்து கழுவிய சிக்கன் துண்டுகளை நன்றாக பிரட்டி 3 முதல் 4 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஃபிரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
இதையும் படிச்சு பாருங்க: டெய்லி நைட் தூங்குறதுக்கு முன்ன இத ஒரு கிளாஸ் குடிச்சு பாருங்க.. தூக்கம் சும்மா சொக்கும்…!!!
*சமைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஃபிரிட்ஜில் இருந்து சிக்கனை வெளியே எடுத்து விட்டு அதில் அரிசி மாவு கலந்து நன்றாக கலக்கவும்.
*இப்போது பொரித்தெடுப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி குறைவான தீயில் சிக்கனை சேர்த்து 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
*கடைசியாக 5 நிமிடங்கள் அதிக தீயில் ரோஸ்ட் வைத்துக் கொள்ளுங்கள்.
*அவ்வளவுதான் சுவையான மசாலா ஃபிரைட் சிக்கன் தயார்.
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
This website uses cookies.