DIY தைலம்: கழுத்து வலி, மூட்டு வலி, உடல் வலி எதுவாக இருந்தாலும் இரண்டே நாளில் வலி பறந்து போய்விடும்!!!

Author: Hemalatha Ramkumar
10 October 2022, 3:17 pm

தொற்றுநோய் ஏற்பட்டதில் இருந்து பெரும்பாலானவர்கள் சிறு சிறு உடல்நிலை பிரச்சினைகளுக்கு வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி இயற்கை வைத்தியத்தின் பக்கம் திரும்பி உள்ளனர். அந்த வகையில் உடல் வலியைப் போக்க, DIY தைலம் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

உங்களுக்கு என்ன தேவை:-
*தேங்காய் எண்ணெய்
*புதினா எண்ணெய்
*லாவெண்டர் எண்ணெய்
*யூகலிப்டஸ் எண்ணெய்
*இயற்கை தேன் மெழுகு
*தைலம் சேமிக்க ஒரு சிறிய பெட்டி

எப்படி செய்வது?
– மூன்று டீஸ்பூன் தேன் மெழுகு எடுத்து நான்கு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும்.
– தேன் மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய் நன்கு கலக்கப்படும் வகையில் டபுள் பாய்லர் முறையில் சூடுபடுத்தவும்.
– மைக்ரோவேவில் இருந்து கலவையை எடுத்த பிறகு அனைத்து அத்தியாவசிய எண்ணெய்களின் சில துளிகள் கலவையில் சேர்க்கவும்.
– கலவையை நன்றாகக் கிளறி, மூடி போட்ட ஒரு பாட்டிலுக்கு மாற்றவும்.
– கலவை குளிர்ந்தவுடன் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம்.

எப்படி உபயோகிப்பது?
கலவையை முழுவதுமாக ஆறவைத்து, பின்னர் வலி உள்ள இடத்தில் தடவவும். இருப்பினும், தைலம் தடவுவதற்கு முன் முதலில் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

  • srikanth shared about the sad feeling for what he did to mani ratnam மணிரத்னம்கிட்ட நான் அப்படி பண்ணிருக்கவே கூடாது, எல்லாம் என் தப்புதான்- மனம் நொந்துப்போன ஸ்ரீகாந்த்…