ஆரோக்கியம்

கண்ணாடி போன்ற சருமத்திற்கு அரிசி மாவு, தயிர் ஃபேஷியல்!!!

ஒருவேளை நீங்கள் முழுக்க முழுக்க இயற்கையான, எளிமையான அதே நேரத்தில் நன்கு விளைவுகளை தரக்கூடிய சரும பராமரிப்பு சிகிச்சைகளை தேடி வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு கொரிய அழகு ஹேக் சிறந்த ஒரு ஆப்ஷனாக இருக்கும். 2024 ஆம் ஆண்டில் பல சரும பராமரிப்பு கன்டென்ட் கிரியேட்டர்களிடையே கொரிய DIY அரிசி மாவு மற்றும் தயிர் மாஸ்க் வைரலாக பேசப்பட்டது. இது பல்வேறு விதமான சரும பலன்களை அளிக்க கூடியது. ஆனால் உண்மையில் இந்த காம்பினேஷனை ஸ்பெஷலாக மாற்றுவது எப்படி மற்றும் இது உங்களுடைய சருமத்தை எப்படி மாற்றும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சருமத்திற்கு அரிசி மாவு மற்றும் தயிர் 

கொரிய அழகு பராமரிப்பு முறை என்பது அதன் இயற்கையான மற்றும் உடனடி முடிவுகளை தரக்கூடிய பொருட்களைக் கொண்டு மினுமினுப்பான, ஆரோக்கியமான சருமத்தை தருவதற்காக பெரிய அளவில் பெயர் பெற்று வருகிறது. கொரிய அழகு சிகிச்சைகளில் ஒன்றான அரிசி மாவு மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க் சருமத்தை பளிச்சிட செய்து மென்மையாக்கி அதற்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது. அதே நேரத்தில் இது எந்த விதமான கெமிக்கல்கள் இல்லாமல் கடினமான வேலைகள் இல்லாத ஒரு மாஸ்காக அமைகிறது.

அரிசி மாவு என்பது கொரிய அழகு பராமரிப்பில் பல நூற்றாண்டுகளாக ஒரு முதன்மையான பொருளாக விளங்குகிறது. ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த அரிசி மாவு சருமத்தை மென்மையாக்கி அதனை அதன் தொனியை சமமாக்குகிறது. அதே நேரத்தில் கொரிய உணவு முறையில் தயிர் ஒரு முக்கியமான மற்றும் பலன் தரும் பொருளாக அமைகிறது. இது சரும பராமரிப்புக்கும் நன்மை தருகிறது. ப்ரோபயாடிக், புரோட்டீன்கள் மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்த தயிர் சருமத்திற்கு ஹைட்ரேட்டின் ஏஜென்ட் போல செயல்படுகிறது.

அரிசி மாவு மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி? 

முதலில் நமக்கு இந்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி மாவு மற்றும் தயிரை நன்றாக கலந்து கட்டிகள் எதுவும் இல்லாத மென்மையான பேஸ்டாக எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சிறிதளவு தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும். உங்கள் முகத்தில் தடவுவதற்கு ஏற்ற பதத்தை பெறுவதற்கு தேவைப்பட்டால் கூட குறைய ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை உங்களுடைய சுத்தமான தோலில் விரல்கள் அல்லது பிரஷ் வைத்து தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். முகத்தை கழுவும் போது வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்வது சருமத்தில் உள்ள இறந்த செயல்களை அகற்றுவதற்கு உதவும்.

இதையும் படிச்சு பாருங்க: குளிர் காலத்தில் பச்சிளம் குழந்தைகளை நோய்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி…???

அரிசி மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் 

*அரிசி மாவு மற்றும் தயிர் ஆகிய இரண்டுமே சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள். சருமத்தின் தொனியை சீராக்கும் தயிரில் உள்ள ப்ரோபயாடிக்கள் மற்றும் அரிசி மாவில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்புகள் சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்து மென்மையாக மாற்றுகிறது. 

*அரிசி மாவு லேசான எக்ஸ்ஃபோலியன்டாக செயல்பட்டு இறந்த சரும செல்களை அகற்றி மென்மையான மற்றும் புத்துணர்ச்சி நிறைந்த ஃபிரஷான தோற்றத்தை தருகிறது. 

*தயிரில் உள்ள ஆற்றும் விளைவுகள் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றதாக அமைந்து எரிச்சல் அல்லது சிவத்தலை போக்குகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டென்னிஸ் வீரர் நடாலுக்கு உருவாக்கப்பட்ட வாட்ச்.. இப்போ ஹர்திக் கையில் : விலை இத்தனை கோடியா?!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்ட்ர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி பேசு பொருளாக உலா வருகிறார். தனது மனைவியை விவாகரத்து செய்வதாக…

31 minutes ago

மக்களவைத் தொகுதி குறைப்பா? ஸ்டாலின் அழைப்பு.. அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு என்ன?

தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…

2 hours ago

கணவரை இழந்த நடிகைகளுடன் டேட்டிங் : பிரபலத்தின் அந்தரங்க லீலைகள் அம்பலம்!

கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…

3 hours ago

இந்தி வாலாக்களாக மாற்ற முயற்சி.. திருமாவளவன் கடும் விமர்சனம்!

இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது…

3 hours ago

திமுக ‘இந்த’ தோற்றத்தை உருவாக்குகிறது.. தமிழிசை கடும் சாடல்!

பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…

3 hours ago

This website uses cookies.