இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்க வீட்டிலேயே மருதாணி ஹேர் பேக்!!!
Author: Hemalatha Ramkumar11 November 2024, 10:46 am
இளநரை பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்கு பலர் மருதாணியை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தும் ஹென்னா ப்ராடக்டுகள் அவ்வளவு திருப்தி தரும் வகையில் இருக்காது. ஏனெனில் இவற்றில் நம்முடைய தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டிருக்கும். ஒருவேளை நீங்களும் இந்த பிரச்சனையை சந்தித்து வந்தால் வீட்டிலிருந்தபடியே உங்களுடைய தலைமுடிக்கு எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாத வண்ணம் வலிமையான மற்றும் கருமையான முடியை வளர செய்வதற்கு மருதாணி ஹேர் பேக் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
இதையும் படிக்கலாமே: கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபி: 15 நாள் ஆனாலும் கெடாது… எல்லா வித காம்பினேஷனுக்கும் பொருந்தும்!!!
ரெசிபி 1:
உங்களுடைய தலைமுடியை மருதாணி வைத்து டை அடிப்பதற்கு முதலில் தயிர் போன்ற பதத்தில் தண்ணீர் ஊற்றி மருதாணி பொடியை கலந்து கொள்ளவும். இதனை ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு மறுநாள் காலை ஒரு கலரிங் பிரஷ் பயன்படுத்தி தலை முடியை பாகங்களாக பிரித்து பேஸ்ட்டை தடவவும். இப்பொழுது தலைமுடியில் ஷவர் கேப் அணிந்து 2 முதல் 3 மணி நேரங்களுக்கு காத்திருக்கவும். பின்னர் சல்பேட் இல்லாத கண்டிஷனர் பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். நாளாக ஆக உங்களுடைய தலைமுடி கருமையாவதை உங்களால் பார்க்க முடியும்.
ரெசிபி 2:
மருதாணி பொடியுடன் காபி பொடியை கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கி கொள்ளவும். இதனை இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். பின்னர் தலைமுடியில் தடவி 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பிறகு சல்பேட் இல்லாத கண்டிஷனர் பயன்படுத்தி தலை முடியை அலசவும்.
ரெசிபி 3:
இந்த மருதாணி சிகிச்சை செய்வதற்கு மருதாணி பொடியை தண்ணீரில் கலந்து அதில் 2 முதல் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை 2 முதல் 3 மணி நேரங்கள் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு மறுநாள் காலை தலைமுடியில் தடவுங்கள். வழக்கம் போல சல்பேட் இல்லாத கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு தேவையான போஷாக்கை வழங்கி தலைமுடியை கருமையாக்கும்.