உங்க கன்னங்களுக்கு நேச்சுரல் குலோ கொடுத்து, சிவக்க செய்ய ஹோம்மேடு பீட்ரூட் சீக் டின்ட்!!!

Author: Hemalatha Ramkumar
2 January 2025, 7:09 pm

நம்முடைய வீட்டில் எளிமையாக கிடைக்கும் இயற்கை பொருட்களை அலட்சியப்படுத்திவிட்டு பெரும்பாலும் நாம் கடைகளில் விற்பனை செய்யப்படும் சரும பராமரிப்பு புராடக்டுகளை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். பீட்ரூட் என்பது பல்வேறு சரும பலன்கள் நிறைந்த நமது கண்ணை கவரும் ஒரு அற்புதமான காய்கறி. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு போஷாக்கு வழங்கி, அதனை பாதுகாக்கவும் செய்கிறது. எனவே உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பதற்கு பீட்ரூட் ஒரு சிறந்த பொருளாக அமைகிறது. இது முகத்திற்கு இயற்கையான பொலிவை தருவது மட்டுமல்லாமல் கன்னங்களை சிவக்க செய்வதற்கு இதனை நீங்கள் சீக் டின்ட் ஆகவும் பயன்படுத்தலாம்.

பீட்ரூட் டின்டை கன்னங்களில் பயன்படுத்தும் பொழுது அது உங்களுக்கு இயற்கையான பளபளப்பை தந்து, எந்த ஒரு கடினமான கெமிக்கல்களும் இல்லாமல் உங்கள் அழகை மேம்படுத்துகிறது. ஒருவேளை இந்த இயற்கையான சிகப்பழகை நீங்கள் பெற வேண்டும் என்றால் வீட்டிலிருந்தபடியே பீட்ரூட் சீக் டின்ட் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

*இந்த ஹோம்மேடு பீட்ரூட் சீக் டின்ட் செய்வதற்கு நமக்கு ஒரு பீட்ரூட், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் மற்றும் பீஸ் வாக்ஸ் தேவைப்படும். 

*முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, அதனை துருவி எடுத்துக் கொள்ளலாம். 

*துருவிய பீட்ரூட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து பின்னர் ஒரு சுத்தமான துணியில் அதனை வடிகட்டி பீட்ரூட் சாற்றை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். 

*இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல், 1/4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது உங்களுக்கு விருப்பமான கேரியர் எண்ணெய் சேர்க்கலாம். 

*இது உங்களுக்கு டின்ட் செய்வதற்கு தேவையான ஒரு மென்மையான மற்றும் பூஷாக்கு நிறைந்த பேஸை கொடுக்கும். 

இதையும் படிக்கலாமே: நெய் கூட இதெல்லாம் சாப்பிட்டா அவ்ளோ தான்… முடிச்சு விட்டுரும்!!!

*இப்போது நாம் வைத்துள்ள கற்றாழை கலவையோடு ஒரு சில துளிகள் பீட்ரூட் சாற்றை சேர்க்கவும். 

*நன்றாக கலந்து தேவையான கண்சிஸ்டன்சி வரும் வரை பீட்ரூட் சாற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். விருப்பமிருந்தால் 1/4 டேபிள் ஸ்பூன் பீஸ் வாக்ஸை உருக்கி அதனையும் இந்த பீட்ரூட் ஜெல்லோடு கலக்கவும். 

*இது உங்களுக்கு கெட்டியான அமைப்பை கொடுத்து உங்களுடைய டின்ட் நீண்ட நேரத்திற்கு இருப்பதை உறுதி செய்யும். 

*ஒரு சிறிய ஜாரில் சேமித்து வையுங்கள். 

*இதனை குளிர்ந்த மற்றும் வறண்ட இடத்தில் சேமித்து வைத்தால் ஒரு சில வாரங்கள் வரை கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ