நீரிழிவு நோய்க்கு வரப்பிரசாதமாக அமையும் மா இலையால் செய்யப்படும் பாரம்பரிய மருத்துவம்!!!
Author: Hemalatha Ramkumar24 November 2022, 6:37 pm
இப்போது பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரிசெய்ய சிகிச்சைகள், முன்னெச்சரிக்கைகள், மருந்துகள் போன்றவை அவசியம். இருப்பினும், நீங்கள் பழங்கால வைத்தியத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தால், சீனர்கள் பின்பற்றிய ஒரு மருத்துவம் உள்ளது. அது மாமர இலைகள் கொண்டு செய்யப்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மா இலைகள் ஒரு மந்திரம் போல செயல்படுகிறது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், இந்த இலைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது ஒரு பாரம்பரிய முறை மட்டுமல்ல, அறிவியலாலும் ஆதரிக்கப்பட்டது. 2010 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, மாமர இலைகளின் சாறு குறைந்த குளுக்கோஸை உறிஞ்சுகிறது. எனவே இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
ஒரு மா இலை சாறு உடலில் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல், குளுக்கோஸின் விநியோகத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. சர்க்கரையின் அளவை சீராக்க இது சிறந்தது.
மற்றொரு உண்மை என்னவென்றால், மா இலைகள் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பெக்டின் போன்ற ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இது உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க சிறந்தது.
மூன்றாவதாக, இலைகள் நீரிழிவு நோயின் அனைத்து அறிகுறிகளையும் விடுவிக்கும் என்று கூறப்படுகிறது. இரவின் நடுவில் நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள், அதிக எடை இழப்பு மற்றும் மங்கலான பார்வை ஆகியவை இதில் அடங்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாமர இலைகள் உங்களுக்கு நீரிழிவு நோய் இல்லாவிட்டாலும் நல்லது. இதற்கு காரணம் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
மா இலைகளை எப்படி சாப்பிடுவது?
15 ஃபிரஷான மா இலைகளை 100 முதல் 150 மில்லி தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இந்த கலவையை ஒரு இரவு முழுவதும் விட்டு, காலை உணவுக்கு முன் குடிக்கவும். சிறந்த முடிவுகளைப் பார்க்க மூன்று மாதங்களுக்கு தினமும் இதைப் பின்பற்றவும்.
முடிவில், ஒவ்வொரு உடலும் வெவ்வேறு விதத்தில் குறிப்பாக இயற்கை வைத்தியத்திற்கு எதிர்வினையாற்றுவதால், எதையும் உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது முக்கியம்.