நாள்பட்ட சளி, இருமலையும் மூன்றே நாட்களில் குணப்படுத்தும் திப்பிலி ரசம்!!!

Author: Hemalatha Ramkumar
28 December 2024, 7:30 pm

உங்களுக்கு சளி பிடித்திருந்தாலும் அல்லது உடல்நிலை குறைவு ஏற்பட்டிருந்தாலோ 3 நாளைக்கு தொடர்ந்து இந்த திப்பிலி ரசத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள். சளி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இந்த ரசம் செய்வது மிகவும் எளிது. ஆனால் இதன் மூலமாக கிடைக்கும் பலன்கள் ஏராளம். குறிப்பாக இந்த குளிர்காலத்தில் வாரம் இரண்டு முறை இந்த திப்பிலி ரசத்தை செய்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, தொற்றுகள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

திப்பிலி ரசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்

தக்காளி – 1 

புளிக்கரைசல் – 2 டேபிள் ஸ்பூன் 

வேக வைத்த துவரம் பருப்பு – 1/2 கப் 

மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

மசாலாவிற்கு 

எண்ணெய் – 1 டீஸ்பூன்

திப்பிலி – 2 டேபிள் ஸ்பூன்

முழு மிளகு – ஒரு டீஸ்பூன்

வரமிளகாய் – 2 

வர மல்லி – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பூண்டு – 3 பல்

தாளிப்பதற்கு 

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் 

கடுகு – 1 டீஸ்பூன் 

உளுந்து பருப்பு – 1 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை 

*முதலில் கடாயில் ஒரு எண்ணெயை சூடாக்கி மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். இதில் சீரகத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பொருட்கள் அனைத்தையும் 2 நிமிடங்களுக்கு வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் சீரக விதைகளையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

*இப்போது அதே கடாயில் மீண்டும் எண்ணெயை சூடாக்கி, தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து நறுக்கிய தக்காளி பழத்தை சேர்க்கவும். 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் தக்காளி பழம் வேகட்டும்.

*தக்காளி ஓரளவு வெந்தவுடன் உப்பு, சர்க்கரை மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதையும் படிக்கலாமே: குளிருக்கு சாப்பிட இதமான சூப்பர் ஃபுட்கள்!!!

*இந்த சமயத்தில் நாம் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்குங்கள்.

*அடுத்து தண்ணீர் மற்றும் புளி கரைசல் சேர்த்து கலக்கவும்.

*கொதி வர ஆரம்பிக்கும் போது வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து சுட சுட சாதத்தோடு பரிமாறவும். இதற்கு வெறும் அப்பளம் அல்லது உருக இருந்தால் போதும் இரண்டு தட்டு சாதம் கூட சாப்பிடலாம்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 69

    0

    0

    Leave a Reply