இப்பொழுதெல்லாம் ஒரு வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவருமே வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் வேலைக்கு சென்றால் தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்பதால் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இதுபோன்ற சமயத்தில் சமையல் என்பது சற்று கடினமான ஒரு விஷயமாக தான் இருக்கும். இது போன்ற நபர்களுக்காகவே இருக்கிறது சில ரெசிபிகள். இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த கத்திரிக்காய் ஊறுகாய் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இது இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு அருமையான தொட்டுக்கையாகவும், அதே நேரத்தில் பருப்பு சாதம், ரசம் சாதம், கீரை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு சைடிஷாகவும் சாப்பிடலாம். அப்படியும் இல்லாவிட்டால் வெறும் வெள்ளை சாதத்தில் பிரட்டி கூட சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை இப்போது பார்க்கலாம்.
ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தனியா, 1/2 டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு சிறிய துண்டு கட்டி பெருங்காயம், 10 வர மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டாம், ட்ரை ரோஸ்ட் செய்தால் போதுமானது. வறுத்தபிறகு பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது அதே கடாயில் ஒரு குழி கரண்டி அளவு நல்லெண்ணெய் சேர்க்கவும். நல்லெண்ணெய் சூடானதும் 10 முதல் 12 கத்திரிக்காயை காம்பை நீக்கிவிட்டு நடுவில் இரண்டு கோடு போட்டு சேர்த்துக் கொள்ளலாம். கத்திரிக்காயின் தோல் நிறம் மாறியதும் அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
இப்போது அதே கடாயில் ஏற்கனவே இருக்கும் எண்ணெயோடு மீண்டும் ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் வெந்தயம், 10 பூண்டு பற்கள் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக நாம் வதக்கி வைத்திருந்த கத்திரிக்காய்களை சேர்த்துக் கொள்ளவும்.
இதனோடு நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும். அடுத்து 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள ஊறுகாய் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். ஒரு சிறிய எலுமிச்சம் அளவு புளியை 1/2 கப் தண்ணீரில் கரைத்து அந்த புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ளவும்.
தண்ணீர் நன்றாக வற்றி எண்ணெய் பிரிந்து ஊறுகாய் பதத்திற்கு வரும் வரை காத்திருக்கவும். அவ்வளவுதான் சுவையான நாவூரும் கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.
நடிகையின் ஆபாச வீடியோ.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு…
கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றத் தடுப்பு மற்றும் கண்டறிதல் பிரிவின் சிறப்புப் படையினர், போதைப் பொருள்…
9 மாவட்டங்களில் உள்ள 315 காலிப் பணியிடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது சென்னை:…
நடிகை ரம்பா தமிழ் சினமாவை தாண்டி, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், போஜ்புரி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மார்க்கெட்…
தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பொறுப்பு அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.…
முன்பதிவில் சாதனை படைக்கும் எம்புரான் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பிருத்விராஜ், இயக்குனராகவும் சாதித்து வருகிறார்,அந்த வகையில்…
This website uses cookies.