தலைமுடி நல்லா வளரணும்னா கொஞ்சம் கூட யோசிக்காதீங்க… கண்ண மூடிக்கிட்டு இத யூஸ் பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
9 January 2025, 4:26 pm

பல நூற்றாண்டுகளாக வெந்தயம் மற்றும் வெங்காயம் ஆகிய இரண்டும் அழகான மற்றும் ஆரோக்கியமான தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது. இந்த ஹேர் மாஸ்க் உங்களுடைய தலைமுடிக்கு நம்ப முடியாத பல பயன்களை தரக்கூடியது. எனவே இந்த ஹேர் மாஸ்கை எப்படி தயார் செய்வது, இதனை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

வெந்தயம் மற்றும் வெங்காய ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

வெந்தயம் மற்றும் வெங்காயமாகிய இரண்டுமே இயற்கையான தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பழமையான பொருட்கள். இவை இரண்டும் தனித்தனியான பயன்களை கொண்டுள்ளன மற்றும் ஒன்றாக இணையும் பொழுது தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு வலிமையான ஹேர் மாஸ்காக செயல்படுகிறது. வெந்தயத்தில் உள்ள புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது. மறுபுறம் வெங்காயத்தில் உள்ள சல்பர் கெரட்டின் உற்பத்தியை அதிகரித்து தலைமுடியை ஆரோக்கியமாக மாற்றுகிறது.

இதையும் படிச்சு பாருங்க: ஒரே ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்க… நாள் முழுக்க ஃபிரஷா ஃபீல் பண்ணுவீங்க!!!

வெந்தயம் மற்றும் வெங்காய ஹேர் மாஸ்க் செய்வது எப்படி? 

இந்த ஹேர் மாஸ்க் செய்வதற்கு முதலில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவு ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை ஊற வைத்த வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்து அதனோடு ஃபிரஷான வெங்காய சாற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த ஹேர் மாஸ்கை மயிர்க்கால்கள் மற்றும் தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு, ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை அலசவும். இந்த ஹேர் மாஸ்க்கை வழக்கமான முறையில் பயன்படுத்தி வந்தால் வலிமையான, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் கிடைப்பது உறுதி.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 58

    0

    0

    Leave a Reply