ஸ்மூத்தி, ஷைனி கூந்தலுக்கு சிம்பிளான ஓவர்நைட் கற்றாழை ஹேர் மாஸ்க்!!!
Author: Hemalatha Ramkumar31 December 2024, 6:00 pm
வறண்ட, பொலிவிழந்த உங்களுடைய தலைமுடிக்கு குட் பை சொல்வதற்கு தயாராகி விட்டீர்களா? கற்றாழை என்பது இயற்கையான நீரேற்றம் கொண்ட பண்புகளுக்காக பெயர் போனது. உங்களுடைய தலைமுடிக்கு போஷாக்கு மற்றும் ஈரப்பதத்தை வழங்கி மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு உதவும் 5 ஓவர்நைட் கற்றாழை ஹேர் மாஸ்குகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை என்பது அதன் ஈரப்பதம் வழங்கும் மற்றும் ஆற்றும் பண்புகளுக்கு பிரபலமாக அறியப்படுகிறது. வறட்சி, தலைமுடி எளிதில் உடைந்து போதல், சிக்கு, பொலிவில்லாமல் இருத்தல் மற்றும் பளபளப்பு சேர்ப்பதற்கு கற்றாழையை நீங்கள் பயன்படுத்தலாம். கற்றாழியில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் மயிர் கால்களில் உள்ள எரிச்சல்களை ஆற்றுகிறது. அதே நேரத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் சுற்றுச்சூழல் காரணிகளிடமிருந்து உங்கள் தலைமுடியை பாதுகாத்து, ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு ஒரு இயற்கையான pH சமநிலையை பராமரிக்கிறது.
ஓவர்நைட் கற்றாழை மாஸ்க் செய்வது எப்படி?
1.முதலில் நமக்கு இந்த ஹேர் மாஸ்க் செய்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் தேவைப்படும். கூடுதலாக ஒரு ஷவர் கேப் வைத்திருக்க வேண்டும்.
2. இப்போது ஹேர் மாஸ்கை தயார் செய்ய கற்றாழை ஜெல்லை தேங்காய் எண்ணெய், தேன் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகரோடு ஒரு கிண்ணத்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு பேஸ்ட்டாக மாறும் வரை ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக கலக்க வேண்டும்.
3.இந்த மாஸ்கை உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்தும் பொழுது வேர்கள் முதல் முனைவரை சமமாக தடவவும். அதிலும் கூடுதல் போஷாக்கு தேவைப்படும் இடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
4.இப்போது உங்களுடைய தலைமுடியை ஒரு ஷவர் கேப் மூலமாக மூடி இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும்.
5.மறுநாள் காலை உங்கள் தலைமுடியை அலசுவதற்கு முதலில் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துங்கள். அதன் பிறகு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசவும். வழக்கம் போல ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள்.
இதையும் படிக்கலாமே: வெயிட் லாஸ் பண்ண தேங்காய் எண்ணெய்யா… ஆச்சரியமா இருக்கே!!!
மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய கூடுதல் குறிப்புகள்
*இதில் கூடுதல் ஈரப்பதம் சேர்ப்பதற்கு ஆலிவ் எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெயை கலந்து பயன்படுத்தலாம்.
* பளபளப்பை அதிகப்படுத்துவதற்கு ஒரு டீஸ்பூன் தேன் அல்லது மேப்பில் சிரப் சேர்த்து கொள்ளுங்கள்.
* தலைமுடிக்கு புத்துணர்ச்சி அளிப்பதற்கு புதினா அத்தியாவசிய எண்ணெய் ஒரு சில துளிகள் சேர்க்கலாம்.
* ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் மிகுந்த மயிர்கால்கள் இருந்தால் தேங்காய் எண்ணெய் அளவை நீங்கள் குறைத்துக் கொள்ளலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.