இருமல் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. சளி இருந்தால், பெரும்பாலும் இருமலும் கூடவே சேர்ந்து வந்து விடும். இருமலுக்கு பஞ்ச தீபாக்கினி சூரணம் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். இதனை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
திப்பிலி: ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்: ஒரு தேக்கரண்டி
சுக்கு: இரண்டு துண்டுகள்
சீரகம்: ஒரு தேக்கரண்டி
நாட்டுப் பசு நெய்: தேவைக்கேற்ப
மிளகு : ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மேற் குறிப்பிட்டு உள்ள எல்லாப் பொருட்களையும் தனித் தனியாக ஒரு ஸ்பூன் நாட்டுப் பசு நெய் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வறுத்த வைத்துள்ள பொருட்களை எல்லாம் மொத்தமாக ஒரு மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து, அதனை வைத்து சூரணமாக செய்து கொள்ளவும். இந்த சூரணத்தின் பெயர் தான் பஞ்ச தீபாக்கினி சூரணமாகும். பஞ்ச என்றால் ஐந்து, இதில் நாம் சேர்த்துள்ள திப்பிலி, ஏலக்காய், சுக்கு, சீரகம் மற்றும் மிளகு முதலியவற்றை தான் குறிக்கிறது.
இது வறட்டு இருமல், தொடர்ச்சியான இருமல், கக்குவான் இருமல், சளி இருமல் போன்ற பல வகையான இருமலுக்கு நிவாரணம் அளிக்கும். இதனை நீங்கள் உட்கொள்ளும் முன்னர், நீங்கள் இந்த சூரணத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். அது பின்வருமாறு:
பெரியவர்கள் எப்படி சாப்பிட வேண்டும்:
இந்த பஞ்ச தீபாக்கிணி சூரணத்தில் இருந்து நீங்கள் ஒரு தேக்கரண்டி அளவு மட்டும் எடுத்து
முன்பு சொன்னது போல நாட்டுப் பசு நெய்யில் சேர்த்து நன்றாக குழைத்து காலை மற்றும் மாலை
என தினமும் இருவேளை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அவ்வாறு சரியாக சாப்பிட்டால் மூன்று நாட்களில் இருமலில் இருந்து முழுமையக குணம் அடையலாம்.
சிறுவர்கள் எப்படி சாப்பிட வேண்டும்:
இந்த சூரணத்தில் அரை தேக்கரண்டி எடுத்து தேன் சேர்த்து குழப்பி உங்கள் தினசரி உணவுக்கு முன் காலை நேரத்தில் மட்டும் தொடர்ந்து இரண்டு நாட்கள் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இருமலில் இருந்து விடுபடலாம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு எப்படி கொடுக்க வேண்டும்:
இந்த சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு மட்டுமே எடுத்து அதனை தேன் சேர்த்து குழைத்து குழந்தையின் நாக்கில் தடவ வேண்டும். அவ்வாறு செய்தால் நோய் சரியாகி விடும்.
கவனத்திற்கு: எங்கள் இணையத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
This website uses cookies.