பொதுவாக லட்டு செய்ய வேண்டும் என்றால் அதற்கு பூந்தியை எண்ணெயில் போட்டு பொரித்து தயார் செய்வது வழக்கம். ஆனால் இன்று நாம் செய்யப்போகும் பாசிப்பருப்பு லட்டுவிற்கு எண்ணெய் எதுவும் தேவையில்லை. இதனை மிக எளிமையாக செய்துவிடலாம். இது கிட்டத்தட்ட பார்ப்பதற்கு மோட்டிச்சூர் லட்டு போலவே இருக்கும். இப்போது மிகவும் சாஃப்டான பாசிப்பருப்பு லட்டு எப்படி தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – 5 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
பாதாம் பருப்பு – 10
பிஸ்தா பருப்பு – 10
ஏலக்காய் பொடி – சிறிதளவு
செய்முறை
*பாசிப்பருப்பு லட்டு செய்வதற்கு முதலில் பாசிப்பருப்பை வறுத்துக் கொள்ள வேண்டும்.
*அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நெய் உருகியதும் ஒரு கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
*இதனை மிதமான தீயில் வைத்து பாசிப்பருப்பு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
*இது நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
*அடுத்து இந்த பாசிப்பருப்பை வேக வைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அரைத்து வைத்த பாசிப்பருப்பை சேர்த்து மூடி போட்டு வேகவைக்கவும்.
*பாசிப்பருப்பு வெந்து தண்ணீர் முழுவதுமாக வற்றி கெட்டியானவுடன் அதில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும் பயன்படுத்தலாம்.
*கைவையை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருங்கள்.
*தண்ணீர் எதுவும் இல்லாமல் ஓரளவு கெட்டியானவுடன் வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.
*இப்பொழுது மற்றொரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 உடைத்த முந்திரி, 10 உடைத்த பிஸ்தா பருப்பு, 10 பாதாம் சேர்த்து அதனை நாம் தயார் செய்து வைத்துள்ள பாசிப்பருப்பு கலவையில் சேர்த்து கிளறவும்.
*கையில் எண்ணெய் அல்லது நெய் தடவி தயார் செய்து வைத்துள்ள பாசிப்பருப்பு கலவையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டை பிடிக்கவும்.
*அவ்வளவுதான் சாஃப்டான வாயில் உருகி போகும் பாசிப்பருப்பு லட்டு தயார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.