ஒரு சிலருக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்தால் ஓரிரு நாட்கள் இருந்து விட்டு சென்றுவிடும். ஆனால் ஒரு சிலருக்கு என்ன தான் வைத்தியம் செய்தாலும் அவர்களை விட்டு செல்லாமல் பாடாய் படுத்தும். இதற்காக மருந்து, மாத்திரை, சிரப் என சாப்பிட வேண்டி இருக்கும். தற்போது இதற்கு ஒரு இயற்கையான தீர்வு ஒன்று தெரிய வந்துள்ளது. சுவையான ஒரு பழச்சாறு மூலமாக இருமலை போக்குவது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இருமலை போக்க அன்னாசி பழச்சாறு செய்வதற்கான 3 வழிகள்:-
◆முறை 1: அன்னாசி பழச்சாறு மற்றும் தேன்
ஒரு பாத்திரத்தில் அரை கப் வெதுவெதுப்பான அன்னாசி பழச்சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாகக் கலந்து சிறிது சூடு ஆறியதும் குடிக்கவும். தேன் மற்றும் அன்னாசி இரண்டும் உங்கள் தொண்டையை ஆற்றும் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
◆முறை 2: அன்னாசி பழச்சாறு, தேன், உப்பு மற்றும் மிளகு
ஒரு கப் அன்னாசி பழச்சாறு எடுத்து அதில் அரை டேபிள் ஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்க்கவும். இந்த அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும்.
◆முறை 3: அன்னாசி பழச்சாறு, தேன், இஞ்சி, மிளகு மற்றும் உப்பு
இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் பெற இது ஒரு பாரம்பரிய மருந்து. ஒரு கப் அன்னாசி பழச்சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, 1 சிட்டிகை உப்பு, சிறிதளவு மிளகு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். தொண்டை வலியிலிருந்து விடுபட இதனை 1/4 அளவில் ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும்.
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.