பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் பொள்ளாச்சி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம்!!!
Author: Hemalatha Ramkumar28 November 2024, 8:06 pm
ஹோட்டலுக்கு நேராக போனாலும் சரி, ஹோட்டலில் இருந்து எதுவும் ஆர்டர் செய்ய வேண்டுமானாலும் சரி நிச்சயமாக பலர் முதலில் சொல்வது ‘பிரியாணி’ தான். பிரியாணி என்பது ஒரு உணவல்ல அது ஒரு எமோஷன் என்று சொல்லும் அளவிற்கு பல பிரியாணி வெறியர்கள் உள்ளனர். ஆனால் பிரியாணிக்கு டஃப் கொடுக்கும் வகையில் பொள்ளாச்சி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் உள்ளது என்று சொன்னால் நிச்சயமாக நீங்கள் ஆச்சரியப்படலாம். ஒரே ஒரு நாள் இந்த அரிசி பருப்பு சாதத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள், நிச்சயமாக இனி எல்லா நேரமும் பிரியாணி தான் வேண்டும் என்று அடம் பிடிக்காமல் இந்த பொள்ளாச்சி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதத்தையும் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்.
தேவையான பொருட்கள்
கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 4
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்ன வெங்காயம் – 10
நசுக்கிய பூண்டு – 5 பல்
தக்காளி -2
சாப்பாட்டு அரிசி – ஒரு கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பொள்ளாச்சி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அரிசி மற்றும் 1/2 கப் துவரம் பருப்பை சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு, 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1/2 டேபிள்ஸ்பூன் சீரகம், 4 வர மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
கடுகு பொரிந்த உடன் ஒரு கொத்து கருவேப்பிலை, 10 உரித்த முழு சின்ன வெங்காயம், 4 பல் நசுக்கிய பூண்டு, 2 நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கியவுடன் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, நீளவாக்கில் நறுக்கிய சிறிதளவு தேங்காய் சேர்த்து வதக்கவும்.
இதையும் படிக்கலாமே: ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்கும்போது அதிகமா சாப்பிடுவீங்களா… அத ஈஸியா கண்ட்ரோல் பண்ண சில வழிகள் இருக்கு!!!
பொருட்கள் அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் 1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். தண்ணீர் கொதிக்கும் பொழுது ஊற வைத்த அரிசியையும் பருப்பையும் சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி குக்கரை மூடவும்.
3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம். பிரஷர் அடங்கியவுடன் இறுதியாக 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி ஒரு வாழை இலையில் சுடச்சுட அரிசி பருப்பு சாதத்தோடு உருளைக்கிழங்கு வறுவல் செய்து சாப்பிட்டால் செம ருசியா இருக்கும்.