10 நிமிடங்களில் ரெடியாகும் மொறு மொறுப்பான ஸ்வீட் கார்ன் பக்கோடா!!!

Author: Hemalatha Ramkumar
22 November 2024, 7:48 pm

ஸ்வீட் கார்ன் என்றால் நம்மில் பிடிக்காதவர்களே யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஸ்வீட் கார்ன் பலரது ஃபேவரட் ஸ்நாக்ஸ் ஆக உள்ளது. ஆனால் இதன் சுவையை இன்னும் கூட்டும் விதமாக ஸ்வீட் கார்ன் வைத்து ஒரு அட்டகாசமான பக்கோடா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதனை செய்வதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். மாலை நேரத்தில் டீ அல்லது காபியோடு சாப்பிடுவதற்கு ஒரு அற்புதமான ஸ்நாக்ஸாக இருக்கும். 

தேவையான பொருட்கள் 

ஸ்வீட் கார்ன் – 2 

பெரிய வெங்காயம் – 1 பூண்டு – 2 பல் கொத்தமல்லி தழை –  சிறிதளவு 

உப்பு – தேவையான அளவு அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் 

கடலை மாவு – 1/2 கப் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு 

செய்முறை 

*இப்போது இந்த ஸ்வீட் கார்ன் பக்கோடா செய்வதற்கு 2 ஸ்வீட் கார்ன் எடுத்துக் கொள்ளலாம். 

*அதில் உள்ள கார்னை தனியாக பிரித்தெடுப்பதற்கு கத்தியை வைத்து அனைத்து பக்கங்களிலும் வெட்டி எடுக்கவும். 

*வெட்டி எடுத்த கார்னை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதனோடு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நறுக்கிய 2 பல் பூண்டு, சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி தழை, ஒரு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: தேசிய முந்திரி பருப்பு தினம் 2024: இந்த குட்டி பருப்புல இவ்வளவு ஊட்டச்சத்தா…???

*அடுத்ததாக இதில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1/2 கப் அளவு கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து கொள்ளவும். 

*தண்ணீர் அதிகமாக இருந்தால் தேவைக்கு ஏற்ப கடலை மாவை சேர்த்து பிசையலாம். 

*பக்கோடா பதத்திற்கு மாவை பிசைந்து எடுத்துக் கொள்ளலாம். 

*இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் தயார் செய்து வைத்துள்ள கலவையை எண்ணெயில் உதிர்த்துவிட்டு பொரித்து எடுக்கவும். 

*உங்களுக்கு பிடித்தமான அளவில் உதிர்த்துவிட்டு பொரிக்கவும். இப்போது மொறு மொறுப்பான ஸ்வீட் கார்ன் பக்கோடா தயாராகிவிட்டது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!