தெருவே மணக்க வைக்கிற அளவுக்கு மீன் வறுவல் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
2 January 2025, 8:06 pm

என்னதான் மீன் குழம்பு ருசியாக இருந்தாலும் மீன் வறுவலுக்கு தனி ஃபேன் பேஸ் உள்ளது. தினமும் மீன் வருவல் மட்டும் கொடுத்து விட்டால் போதும் ரசம் இருந்தால் கூட 2 தட்டு சாதம் சாப்பிட்டு விடலாம். அந்த அளவிற்கு எந்த வகை மீனாக இருந்தாலும் அது வறுவலாக இருந்தால் ருசி அதிகமாக தான் இருக்கும். ஆனால் மீன் வருவலை வெவ்வேறு விதமாக செய்யலாம். மீன் வறுவலுக்கு தனியாக ஒரு ஸ்பெஷல் மசாலா பயன்படுத்தினால் போதும் சுவையான மீன் வருவலை தயார் செய்து விடலாம்.

தேவையான பொருட்கள் 

மீன் துண்டுகள்

மிளகாய் பொடி

மஞ்சள் பொடி

மல்லி பொடி

கரம் மசாலா

இஞ்சி பூண்டு விழுது

கறிவேப்பிலை 

கொத்தமல்லி தழை

எலுமிச்சை சாறு 

உப்பு

தேங்காய் எண்ணெய்

செய்முறை 

மீனை மேரினேட் செய்வதற்கு முதலில் நமக்கு மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மல்லி பொடி, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு தேவைப்படும்.

இதில் நீங்கள் காஷ்மீரி மிளகாய் பொடி சேர்க்கும் பொழுது மீன் வறுவல் பார்ப்பதற்கு கண்ணை கவரக்கூடியதாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு தட்டில் வைத்து நன்றாக கலந்து கொள்ளவும். 

இதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு இல்லாத சமயத்தில் நீங்கள் வினிகரையும் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட் திக்காக இருக்கு வேண்டும். இதில் நாம் இன்னும் மீனை சேர்க்கவில்லை என்பதால் தேவைப்பட்டால் மசாலாவை நீங்கள் சுவைத்து பார்க்கலாம். 

மீனை நன்றாக சுத்தம் செய்து உங்களுக்கு விருப்பமான அளவில் வெட்டி எடுத்து தயார் செய்து வைத்துள்ள மசாலாவை ஒவ்வொரு துண்டிலும் தனித்தனியாக தடவவும். மசாலாக்களை தடவுவதற்கு முன்பு மீன்கள் மீது ஆங்காங்கே கோடு போட்டுக் கொள்வது மசாலா நன்றாக ஊறுவதற்கு உதவும். 

இதையும் படிக்கலாமே: உங்க கன்னங்களுக்கு நேச்சுரல் குலோ கொடுத்து, சிவக்க செய்ய ஹோம்மேடு பீட்ரூட் சீக் டின்ட்!!!

இதனை 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கலாம். இப்போது ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். மீன்களை பொரிப்பதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த ஒன்றாக இருக்கும். மீன்களை தேங்காய் எண்ணெயில் 4 முதல் 5 நிமிடங்களுக்கு அதிக வெப்பத்தில் முதலில் பொரிக்க வேண்டும்.

அதன் பிறகு திருப்பி போட்டு மறுபுறத்தில் மீண்டும் 3 முதல் 4 நிமிடங்களுக்கு பொரிக்கவும். இறுதியாக மீன்களை பொரித்த உடன் அதனை கொத்தமல்லி தழை, எலுமிச்சை மற்றும் வெங்காயத்தோடு சூடாக பரிமாறவும்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 40

    0

    0

    Leave a Reply