இந்த மாதிரி பூண்டு சட்னி செய்து கொடுத்தா தினமும் கூட இட்லி, தோசை சாப்பிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
2 December 2024, 7:59 pm

தினமும் இட்லி, தோசை செய்வதெல்லாம் சரிதான். ஆனால் இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடுவதற்கு விதவிதமாக செய்து கொடுத்தால் தான் வீட்டில் இருப்பவர்களும் ஆசையாக சாப்பிடுவார்கள். அந்த வகையில் இட்லி தோசைக்கு அற்புதமான ஒரு காம்பினேஷனாக இருக்கும் பூண்டு சட்னி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இது இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் ஆலு பரோட்டா அல்லது சப்பாத்தியோடு சாப்பிடுவதற்கும் அருமையாக இருக்கும். 

தேவையான பொருட்கள்

பூண்டு – 10 பல் 

வர மிளகாய் -6 

சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 

புளி கரைசல் – 1 டேபிள் ஸ்பூன் 

உப்பு தேவைக்கேற்ப 

தாளிப்பதற்கு: 

கடுகு – 1/2 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து 

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்கவும். 

இதில் தோலுரித்த முழு பூண்டு, வர மிளகாய் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும். 

இதையும் படிக்கலாமே: டயாபடீஸ் பிரச்சினையை எளிதில் சமாளிக்க உதவும் கேரட், வெள்ளரிக்காய் ஜூஸ்!!!

இப்போது ஃபிரஷாக துருவிய தேங்காய் சேர்த்து அதனையும் எண்ணெயில் 2 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளலாம். 

வறுத்த தேங்காய் மற்றும் பூண்டு, வர மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் புளி மற்றும் உப்பு சேர்க்கவும். 

அரைக்கும் போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். 

சட்னியை நைசாக அரைத்துக் கொள்ளவும். 

சட்னி எந்த பதத்திற்கு வேண்டும் என்பது உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றது. 

தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். 

இப்போது சட்னியை வேறு ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். 

இதற்கு தாளிப்பதற்கு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து கடுகு பொரிந்த உடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து சட்னி மீது ஊற்றி நன்றாக கிளரவும். 

அவ்வளவுதான் பூண்டு சட்னி இப்பொழுது பரிமாறு தயாராக உள்ளது. 

விருப்பப்பட்டால் பூண்டு மற்றும் வரமிளகாய் வதக்கும் பொழுது 4 தக்காளி சேர்த்து வதக்கி அரைத்தால் தக்காளி பூண்டு சட்னி தயாராகிவிடும்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 85

    0

    0