இனி குழந்தைகளுக்கு வீட்லயே டேஸ்டா தக்காளி ஜாம் செய்து கொடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
5 December 2024, 7:17 pm

தக்காளி ஜாம் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் கடைகளில் வாங்கப்படும் தக்காளி ஜாமில் செயற்கை நிறம் மற்றும் பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்படுவதால் அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது. எனவே மிகவும் எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான தக்காளி ஜாம் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதனை செய்வதற்கு குறைவான பொருட்களும், குறைந்த நேரமுமே எடுக்கும். மேலும் இதில் நாம் எந்தவிதமான பிரிசர்வேட்டிவ்களையும் சேர்க்கப் போவது கிடையாது. ஆகவே இந்த ஜாம் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

தேவையான பொருட்கள்

தக்காளி – 5

சர்க்கரை – 1/4 கப்

ஏலக்காய் – 4

உப்பு ஒரு சிட்டிகை 

நெய் ஒரு டீஸ்பூன்

செய்முறை 

*நன்கு பழுத்த தக்காளி பழங்களை எடுத்து சுத்தமாக கழுவிக் கொள்ளவும். 

*அனைத்து தக்காளிகளிலும் பிளஸ் வடிவத்தில் கத்தியை வைத்து கோடு போட்டுக் கொள்ளலாம். 

*இவ்வாறு செய்வது தக்காளியில் உள்ள தோலை எளிதாக அகற்றுவதற்கு உதவுகிறது. 

*இப்போது தக்காளி பழங்களை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஒரு சில வினாடிகளுக்கு அப்படியே விடவும். 

இதையும் படிச்சு பாருங்க: ஹெவி மீல்ஸ் சாப்பிட்ட பிறகு உண்டாகும் வயிற்று உப்புசத்தை 5 நிமிடங்களில் போக்க அசத்தலான டிப்ஸ்!!!

*30 வினாடிகள் கழித்து தக்காளி பழங்களை எடுத்து குளிர்ந்த நீரில் முக்கி எடுக்கவும். 

*இப்போது தக்காளி பழங்களின் தோலை பொறுமையாக அகற்றவும். 

*தோல் உரித்த தக்காளி பழங்களை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும். 

*அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அரைத்த தக்காளி மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும். 

*தீயை அதிகமாக வைத்து தக்காளியை கொதிக்க விடவும். 

*ஜாமுக்கு ஃபிளேவர் சேர்ப்பதற்கு 4 ஏலக்காயை இடித்து சேர்த்துக் கொள்ளலாம். 

*ஒருவேளை உங்களுக்கு ஏலக்காய் ஃபிளேவர் பிடிக்காவிட்டால் இதனை நீங்கள் தவிர்த்து விடலாம். 

*தக்காளியின் சுவையை சமநிலையாக்க ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கிளறவும். 

*அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து 10 நிமிடங்களுக்கு அதிக தீயில் சமைக்கவும். 

*ஜாம் நன்றாக கெட்டியானவுடன் இறுதியாக ஒரு டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 

*அவ்வளவுதான் நாம் செய்து வந்த தக்காளி ஜாம் இப்போது தயாராக உள்ளது. 

இந்த ஜாம் செய்வதற்கு ஃபிரஷான பழுத்த நாட்டு தக்காளியை பயன்படுத்துவது சிறந்தது. 

ஜாமுக்கு கூடுதல் ஃபிளேவர் சேர்ப்பதற்கு நீங்கள் வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை பிரிட்ஜில் வைத்து 3 வாரங்கள் வரை பயன்படுத்தலாம். மேலும் இவ்வாறு சேமித்து வைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு சேர்ப்பது ஜாம் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 96

    0

    0