எல்லா குழம்பு வகைக்கும் செட் ஆகுற மாதிரி சூப்பரான வாழைக்காய் சுக்கா!!!

Author: Hemalatha Ramkumar
3 January 2025, 7:56 pm

எப்பொழுதுமே வாழைக்காய் வாங்கினால் அதனை பொரியல், பொடி மாஸ், ஃப்ரை போன்றவற்றை செய்வோம். ஆனால் இன்று நாம் கொஞ்சம் வித்தியாசமாக வாழைக்காய் சுக்கா ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். இது அட்டகாசமான சுவையில் இருக்கும். தயிர் சாதம், பருப்பு ரசம், கீரை கூட்டு ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு இது ஒரு அற்புதமான சைட் டிஷ். கிட்டத்தட்ட இதனை நாம் மட்டன் சுக்கா ஸ்டைலில் செய்யப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் 

வெங்காயம் 

தக்காளி 

பச்சை மிளகாய் 

இஞ்சி பூண்டு விழுது 

மிளகாய் பொடி 

மல்லி பொடி 

மஞ்சள் பொடி

கரம் மசாலா 

தேங்காய் 

சோம்பு 

கடுகு 

உளுத்தம் பருப்பு 

பெருங்காயம் 

கறிவேப்பிலை 

தேங்காய் எண்ணெய்

செய்முறை

*முதலில் வாழைக்காய் சுக்கா செய்வதற்கு தேங்காய் மற்றும் சோம்பு விதைகளை கொரகொரப்பாக அரைத்து எடுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

*அடுத்து தண்ணீரை ஊற்றி அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதிக்கு கொண்டு வரவும்.

*பின்னர் இதில் தோலுரித்து நறுக்கிய வாழைக்காயை சேர்க்கவும்.

*4 முதல் 5 நிமிடங்கள் வாழைக்காய் வேகட்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு வாழைக்காயை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

*அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் கண்ணாடி போல வதங்கியவுடன் தக்காளி சேர்த்து அது சாஃப்டாகும் வரை வதக்கவும்.

*இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

*இந்த சமயத்தில் நாம் வைத்துள்ள மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா சேர்த்து 1 முதல் 2 நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளுங்கள்.

*இப்போது வேக வைத்த வாழைக்காயை சேர்த்து மசாலாவோடு நன்றாக பிரட்டவும்.

*இந்தக் கட்டத்தில் சுவைத்து பார்த்து உங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: நமக்கு எப்பவும் நாம தான் ஃபர்ஸ்ட்… சுய பராமரிப்புக்கான ஈசி டிப்ஸ்!!!

*இறுதியாக அரைத்து வைத்த தேங்காய் சோம்பு பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறவும்.

*மிதமான தீயில் வாழைக்காய் ரோஸ்ட் ஆகும் வரை 5 முதல் 6 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

*தண்ணீர் எதுவும் இல்லாமல் முழுவதுமாக வற்றி ரோஸ்ட் ஆனவுடன் அடுப்பை அணைத்து சூடாக சாதத்தோடு பரிமாறவும்.

  • Vikram to play villain in Marco sequel வெயிட்டான வில்லன் ரோலில் விக்ரம்…மலையாள சினிமாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல இயக்குனர்..!
  • Views: - 47

    0

    0

    Leave a Reply