பீட்ரூட் பிரியாணி: குட்டீஸ் டிபன் பாக்ஸுக்கு ஏற்ற ரெசிபி!!!
Author: Hemalatha Ramkumar11 January 2025, 8:05 pm
பொதுவாக குழந்தைகளை பீட்ரூட் சாப்பிட வைப்பது சற்று கடினமான காரியம் தான். பீட்ரூட் என்பது அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறி. பெரியவர்கள் கூட சில சமயங்களில் பீட்ரூட்டை தவிர்ப்பது உண்டு. எனவே இவர்களுக்காகவே இந்த ரெசிபி… பீட்ரூட்டை வைத்து சுவையான பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட்
பாஸ்மதி
அரிசி
பட்டை
ஏலக்காய்
சீரகம்
வெங்காயம்
மிளகாய் பொடி
மல்லி பொடி
செய்முறை
*பீட்ரூட் பிரியாணி செய்வதற்கு முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, பின்னர் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
*இப்போது பிரியாணி செய்வதற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் சூடானவுடன் ஒரு துண்டு பட்டை, 2 ஏலக்காய், 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
*சீரகம் பொரிந்தவுடன் 2 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
*வெங்காயத்தை 2 நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: டைட் ஜீன்ஸ் போட்டா ஆண் மலட்டுத்தன்மை ஏற்படுமா???
*இந்த சமயத்தில் இதற்கு தேவையான உப்பு, 1.5 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி, 2 டேபிள் ஸ்பூன் மல்லி பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
*மிளகாய் பொடி மற்றும் மல்லி பொடியின் பச்சை வாசனை போன உடன் துருவிய ஒரு பீட்ரூட்டை சேர்த்து கூடவே நாம் ஊற வைத்துள்ள அரிசியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
*2 டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் சரியானதாக இருக்கும்.
*இதில் 3 டம்ளர் தண்ணீர் மற்றும் ஒரு டம்ளர் அளவு தேங்காய் பால் சேர்த்தும் நீங்கள் செய்யலாம்.
*தண்ணீர் கொதிக்கும் போது மூடி போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை தண்ணீரை அரிசி உறிஞ்சும் வரை வேக வைக்கவும்.
*இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு 10 நிமிடங்கள் மூடி போட்டு அப்படியே வைக்கவும்.
*அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் பிரியாணி தயார். வெங்காய பச்சடியுடன் இதனை சூடாக பரிமாறவும்.