தொலைதூர பயணங்களின் போது ஏற்படும் முதுகு வலியில் இருந்து விடுபட உதவும் டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar23 September 2022, 7:21 pm
நீண்ட தூரம் அல்லது அதிக நேரம் வாகனம் ஓட்டுவது சில நேரங்களில் முதுகு வலியை ஏற்படுத்தும். அதே நேரத்தில், இந்த வலி முழு பயணத்தையும் என்ஜாய் பண்ண விடாமல் கெடுத்துவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த வலி ஏற்படாமல், பயணத்தை ரசிக்க வேண்டும் என்பதற்காக, வாகனம் ஓட்டும் முறையை கொஞ்சம் மாற்ற வேண்டும். இன்று அதற்கான சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.
ஸ்டீயரிங் வீலிலிருந்து சரியான தூரத்தை பராமரிக்கவும்: வாகனம் ஓட்டும் போது இருக்கையில் அமர்ந்த பிறகு ஒரு சிலர் முன்னோக்கி வளைவார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஸ்டீயரிங் வைத்திருப்பது எளிது. ஆனால் இந்த முறை முதுகில் வலியை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக ஸ்டீயரிங் வீலிலிருந்து சரியான தூரத்தை பராமரிக்கவும்.
இருக்கையின் பின்புறம்: சிலர் வாகனம் ஓட்டும்போது அதிக வசதிக்காக இருக்கையின் பின்புறத்தை மிகவும் பின்னோக்கி சாய்ப்பார்கள். இருப்பினும், இந்த முறை உங்கள் முதுகில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் வாகனம் ஓட்டினால், அவ்வாறு செய்வதைத் தவிர்க்கவும்.
இருக்கையின் உயரம்: வாகனம் ஓட்டும் போது, முதுகில் வலி ஏற்படாமல் இருக்கவும், வசதியை பராமரிக்கவும் இருக்கையின் உயரத்தை சரிசெய்ய வேண்டியது அவசியம். முதலில் இருக்கையை கீழ் நிலையில் வைக்கவும். பின்னர் மெதுவாக தேவைக்கேற்ப உயர்த்தி சரிசெய்யவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இடைப்பட்ட ஓய்வு: நீங்கள் நீண்ட தூரம் பயணிக்கிறீர்கள் என்றால், உடல் அலுப்பைத் தவிர்க்க, இடைவிடாமல் வாகனம் ஓட்டுவதில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஓய்வெடுக்கும் போது புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.