குளிர் காலத்தில் கை, கால்கள் சில்லுனு ஆகுதா… அதுக்கான சிம்பிள் டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
9 December 2024, 11:21 am

பொதுவாக குளிர்காலத்தில் பலருக்கு கைகள் மற்றும் கால்கள் சில்லென்று மாறி நடுக்கம் ஏற்படும். குளிர்ந்த வெப்பநிலையின் விளைவாக உடலில் ரத்த ஓட்டம் குறைவதால் இது ஏற்படுகிறது. ரத்த நாளங்கள் குறுகி, ரத்த ஓட்டம் குறைந்து, அதனால் கைகள் மற்றும் கால்கள் மரத்து, குளிர்ந்த நிலைக்கு மாறுகிறது. மோசமான ரத்த ஓட்டம் கைகள் மற்றும் கால்களில் வீக்கம் மற்றும் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும். இது நமக்கு அசௌகரியத்தையும், வலியையும் உண்டாக்கும். இது குறிப்பாக குளிர்கால மாதங்களில் அனுபவிக்கப்படுகிறது. எனவே குளிர்காலத்தில் உங்களுடைய ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கைகள் மற்றும் கால்களை கத கதப்பாக மாற்ற உதவும் சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.

ஆக்டிவாக இருக்கவும் 

குளிர்காலத்தில் ஆக்டிவாக இருப்பதன் மூலமாக உங்களுடைய உடலின் ரத்த ஓட்டத்தை நீங்கள் அதிகரிக்கலாம். விறுவிறுப்பான நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை அடிக்கடி செய்வது உங்களுடைய ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது உங்களுடைய கைகள் மற்றும் கால்களை கதகதப்பாக வைத்து, மரத்துப் போகும் உணர்வு மற்றும் அசௌகரியம் ஏற்படுவதை குறைக்கிறது.

சாக்ஸ் அணியவும்

கம்ப்ரஷன் சாக்ஸ் அணிவது குளிர் காலத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான மற்றொரு எளிமையான வழி. மென்மையான அழுத்தத்தை கொடுத்து கம்ப்ரஷன் சாக்ஸ் ரத்தத்தை இதயத்தை நோக்கி மேலே உந்தி தள்ளும். இது நம்முடைய ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

இதையும் படிச்சு பாருங்க: குளிருக்கு இதமா சூப்… கூடுதல் போனஸா நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்குது…!!!

தேநீர் பருகவும் 

தேநீர் பருகுவது குளிர்காலத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கான ஒரு இதமான வழி. இஞ்சி, புதினா மற்றும் கிரீன் டீ போன்ற தேநீர் வகைகள் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே இந்த குளிர்ந்த வானிலையில் உங்களை கதகதப்பாக வைப்பதற்கு இது ஒரு எளிமையான வழியாக அமைகிறது.

கால்களை மசாஜ் செய்தல் 

உங்களுடைய கால்களை மசாஜ் செய்வது எளிமையான ஒரு விஷயமாக தோன்றினாலும் குளிர் காலத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு இது ஒரு திறமை மிகுந்த வழி. மென்மையான மசாஜ் நுட்பங்களை பின்பற்றுவது ரத்த ஓட்டத்தை தூண்டி, தசைகளுக்கு ஓய்வு அளிக்கும். இது குளிர்ந்த கைகள் மற்றும் கால்கள் பிரச்சனையை தடுக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Highest paid actor in world Johnwick actor உலகின் மிக அதிக சம்பளம் பெற்ற நடிகர் ₹1,324 கோடி சம்பாதித்தார்
  • Views: - 96

    0

    0

    Leave a Reply