ஒருவர் எப்போதுமே தமது நாளை பாசிட்டிவான எண்ணத்தோடு ஆரம்பிக்க வேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு காலை எழுந்திருக்கும் பொழுதே சோம்பேறித்தனமாக, இன்று வேலைக்கு தான் செல்ல வேண்டுமா? அல்லது பள்ளிக்கு தான் செல்ல வேண்டுமா? என்பது போல இருக்கும். இது எப்போதாவது ஒருமுறை ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். எனினும், தினந்தோறும் இந்த மாதிரியான உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் நீங்கள் ஒரு சில தவறுகளை செய்து வருகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில கெட்ட பழக்கங்கள் காரணமாக உங்களுடைய காலைகள் சோம்பேறித்தனமாக மாறுகின்றது. அது என்ன மாதிரியான கெட்ட பழக்கங்கள் என்பதை பார்க்கலாம்.
காலை எழுந்ததும் முதலில் போனை பார்ப்பது
காலை எழுந்ததும் முதல் வேலையாக போனை பார்ப்பது பலரது பழக்கமாக உள்ளது. இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இமெயில்கள், சோஷியல் மீடியா அல்லது நியூஸ் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களுடைய படுக்கையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு உங்கள் போனை பார்க்கும் பழக்கத்தை இன்றோடு கைவிடுங்கள்.
தண்ணீர் குடிக்க மறப்பது
பலர் எழுந்ததுமே காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறனர். ஆனால் முதலில் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு சொம்பு தண்ணீர் குடிப்பது தான் நல்லது. உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஆரம்பித்து, ஆற்றல் அளவுகளை அதிகரிப்பதற்கு உங்களுடைய நாளை தண்ணீருடன் ஆரம்பியுங்கள்.
அலாரத்தை ஸ்னூசிங் செய்வது
பலர் அலாரத்தை வைத்து விட்டு அதனை ஸ்னூசிங்கிள் வைத்து விடுவார்கள். தொடர்ந்து அவ்வாறு செய்வது உங்களுக்கே ஆபத்தாக முடிந்து விடும்.
காலை உணவை தவிர்ப்பது
காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு ஆகும். அதனை தவிர்ப்பதால் உங்கள் ஆற்றல் அளவுகள் குறையும். மேலும் கவனச்சிதறல்கள் ஏற்படும். ஆகவே உங்களுடைய காலை உணவு கட்டாயமாக ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவாக இருக்க வேண்டும்.
காலை நீட்சி பயிற்சிகள் காலையில் உடற்பயிற்சி அல்லது நீட்சி பயிற்சிகளை செய்வது உங்களை நேரடியாக பாதிக்காவிட்டாலும் உங்களுடைய நாளை ஆரம்பிப்பதற்கு இது ஒரு சிறந்த வழி. 10 முதல் 15 நிமிடங்கள் நீங்கள் நீட்சி பயிற்சியில் ஈடுபட்டாலே போதுமானது அல்லது தியானம், யோகா போன்றவற்றையும் நீங்கள் செய்யலாம். இது உங்கள் மனதை அமைதிப்படுத்தி உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.
மேலும் படிக்க: உங்க தலைமுடி பிரச்சினை எல்லாத்தையும் சால்வ் பண்ண கிரீன் டீ பவுடர்!!!
அவசர அவசரமாக காலை வேலைகளை செய்வது
காலையில் அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்வது உங்களுக்கு பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். முடிந்த அளவு முன்கூட்டியே எழுந்து பொறுமையாக சாவகாசமாக உங்களது காலையை அனுபவியுங்கள்.
உங்களுடைய இந்த சிறு சிறு கெட்ட பழக்கங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இவற்றை இனியும் செய்யாமல் உங்களுடைய காலையை புத்துணர்ச்சியாக மாற்றுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.