எல்லா வகையான சாதத்துக்கும் செம காம்பினேஷனா இருக்குற கத்திரிக்காய் ஃபிரை ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
9 January 2025, 7:47 pm

ஒரு சிலருக்கு கத்திரிக்காய் என்றால் சுத்தமாக பிடிக்காது. ஆனால் இன்னும் சிலருக்கு கத்திரிக்காய் ஃபேவரட் ஆக இருக்கும். சாப்பிடும் விதத்தில் செய்து கொடுத்தால் நிச்சயமாக கத்திரிக்காயை வெறுப்பவர்கள் கூட ஆசையோடு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அப்படி இருக்க கத்திரிக்காயை வைத்து செம டேஸ்டான ஃபிரை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், கீரை சாதம் போன்றவற்றுடன் தொட்டு சாப்பிடுவதற்கு அருமையான காம்பினேஷன் ஆக இருக்கும்.

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் 

கடலை மாவு 

அரிசி மாவு 

மிளகாய் பொடி 

தனியா பொடி 

சீரகப்பொடி 

மஞ்சள் பொடி 

எலுமிச்சை பழம் 

உப்பு 

எண்ணெய்

செய்முறை 

*கத்திரிக்காய் ஃபிரை செய்வதற்கு 5 முதல் 6 பிஞ்சு கத்தரிக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். 

*இதனை நன்கு சுத்தம் செய்து காம்பை அகற்றிவிட்டு ஸ்லைசாக வெட்டிக் கொள்ளலாம். 

*இப்பொழுது இந்த ஃபிரை செய்வதற்கான மாவு தயாரிப்பதற்கு ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளலாம். 

*அரிசி மாவு சேர்ப்பது கத்திரிக்காய் ஃபிரை கிரிஸ்பியாக இருப்பதற்கு உதவும். 

*இப்போது அதே கிண்ணத்தில் தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். 

*அடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி, 1.5 டேபிள் ஸ்பூன் தனியா பொடி, 1/2 டேபிள் ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து கலக்கவும். 

இதையும் படிக்கலாமே: வழக்கமான டீக்கு பதிலா ஒரு மாசத்துக்கு இந்த டீ குடிச்சு பாருங்க… ரிசல்ட் பார்த்து ஷாக்காகி போவீங்க!!!

*இப்போது அரைமூடி எலுமிச்சம்பழ சாற்றை பிழிந்து கொள்ளலாம். 

*சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். 

*இது பஜ்ஜி மாவு அல்லது பக்கோடா மாவு போல கெட்டியாக இருக்கக் கூடாது. லேசான தண்ணி பதத்தில் இருக்க வேண்டும். 

*இப்பொழுது நாம் வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய்களை இந்த மாவில் முக்கி எடுக்கவும். 

*தோசை கல்லை அடுப்பில் வைத்து 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கத்திரிக்காய்களை ஷேலோ ஃபிரை செய்து எடுத்துக் கொள்ளவும். 

*இரண்டு பக்கமும் கோல்டன் பிரவுன் வந்தவுடன் சூடாக எடுத்து பரிமாறவும்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!