பருப்பு மட்டும் வைத்து சிம்பிளா ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல சூப்!!!

Author: Hemalatha Ramkumar
8 January 2025, 8:15 pm

சூப் என்பது செய்வதற்கு எளிமையான ஒன்றாக இருந்தாலும் அது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அதிக பயன்களை கொண்டுள்ளது. இன்று நாம் பாசிப்பருப்பு, காய்கறிகள் மற்றும் கருப்பு மிளகு வைத்து அற்புதமான சூப் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். வயிற்றுக்கு பசி எடுக்காத சமயத்தில் இந்த சூப் வைத்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 1/2 கப்

எண்ணெய் – 1 டீஸ்பூன் 

சீரகம் – 1 டீஸ்பூன் 

வெங்காயம் – 1 

கேரட் – 1 

பீன்ஸ் – 5 

பச்சை பட்டாணி – 1/2 கப்

தக்காளி – 1 

மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன் 

உப்பு – சுவைக்கு ஏற்ப 

கருப்பு மிளகு பொடி 

தண்ணீர் – 3 கப்

செய்முறை 

*ஒரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும். அதில் சீரகத்தை சேர்த்து அது பொரிந்த உடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கி கொள்ளவும். 

*பிறகு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்குங்கள். 

*இந்த சமயத்தில் கழுவி சுத்தம் செய்த பாசிப்பருப்பு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும். 

*குக்கர் மூடியை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 விசில் வரும் வரை காத்திருக்கும். 

இதையும் படிக்கலாமே: தம்மாத்துண்டு புல்லு கேன்சர் வராமல் தடுக்கணும்னு சொல்றாங்க!!!

*விசில் வந்து பிரஷர் அடங்கியவுடன் இன்னும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் கருப்பு மிளகு பொடி சேர்த்து சூடாக பரிமாறவும்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!