நாற்பதிலும் யங்கா ஃபீல் பண்ண வைக்கிற ஃபேஸ் பேக்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
9 November 2024, 11:20 am

வயதாகும் செயல்முறை என்பது இயற்கையான ஒன்றுதான். ஆனால் அது முன்கூட்டியே ஏற்படும் பொழுது நமக்கு வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு மற்றும் வாழ்க்கை முறை. வயதான அறிகுறிகள் முன்கூட்டியே ஏற்படுவதை தவிர்க்கவும், அதனை தாமதப்படுத்தவும் உதவக்கூடிய சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முன்கூட்டிய வயதான அறிகுறிகளை எதிர்த்து போராடுகிறது. இதில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் E அதிகமாக இருப்பதால் நமது சருமத்தை ஆற்றி அதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. இதனால் சருமம் மென்மையாக மாறுகிறது. 

கற்றாழை 

கற்றாழையானது வைட்டமின்கள் மற்றும் C, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்தது. இது ஒரு இயற்கை பாதுகாவலராக செயல்படுகிறது. சருமத்தில் உள்ள தொய்வைப் போக்கி அதனை உறுதியாக மாற்றுகிறது. இதனால் உங்களுக்கு இளமையான தோற்றம் கிடைக்கும்.

வாழைப்பழம் ஃபேஸ் மாஸ்க் வாழைப்பழங்களில் வைட்டமின் A, வைட்டமின் B6, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றது. இதனால் நமக்கு மென்மையான அதே நேரத்தில் புத்துணர்ச்சியான சருமம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: 

ஆரோக்கியமான வழியில் வெயிட் கெயின் பண்ண ஆசையா… அப்போ நீங்க சாப்பிட வேண்டியது இது தான்!!!

முல்தானி மிட்டி 

இந்த பாரம்பரிய பொருள் பல தலைமுறைகளாக சருமத்தை இறுக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை உறிஞ்சி ஆழமாக சருமத்தை சுத்தம் செய்து அதற்கு தேவையான போஷாக்கை வழங்குகிறது. மேலும் இது எண்ணெய் சருமம், பிக்மென்ட்டேஷன், முகப்பரு மற்றும் பிளாக்ஹொட் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. 

ஓட்ஸ் ஃபேஸ் பேக்

ஓட்ஸில் அவினான்த்ராமைடு என்ற வீக்க எதிர்ப்பு காம்பவுண்ட் உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வறட்சியை போக்கி அதில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இதனால் முகப்பருக்கள் மற்றும் பிளாக்ஹெட் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்து நமக்கு தெளிவான சருமம் கிடைக்கும்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 127

    0

    0