எப்போதும் வெப்பமாக இருக்கும் குளியலறையை குளுமையாக்க உதவும் டிப்ஸ்!!!
Author: Hemalatha Ramkumar10 June 2022, 6:38 pm
வியர்வை மற்றும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை குளித்து வருகிறோம். ஆனால் ஒரு சிலரது குளியல் அறையே வெக்கையாக இருக்கும். குளித்து விட்டு அதிலிருந்து எப்போது வெளியே வருவோம் என்ற எண்ணம் தோன்றும். இப்படியான ஒரு பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். குளியல் அறையை எப்படி குளுமையாக வைத்திருக்க பின்வரும் ஆலோசனைகளை நீங்கள் பின்பற்றலாம்.
குளியலறை ஜன்னல்களை மூடி விடவும்:
உங்கள் குளியலறையில் சூரிய வெளிச்சம் நேரடியாக உள்ளே விழுகிறது என்றால், முடிந்த வரை ஜன்னல்களை மூடி வையுங்கள். இன்சுலேட்டர் அல்லது வெயிலை எதிரொலிக்கும் தகடுகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்தவும்:
குளியலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்துவது அதன் உள்ளே இருக்கும் சூடான காற்றை வெளியேற்ற உதவிகரமாக இருக்கும்.
குளியலறை கதவுகளை திறந்து வையுங்கள்:
குளியலறையின் கதவுகளை மூடி வைக்கும் போது, அதிலிருக்கும் வெப்பமானது அந்த அறையினுள்ளே சுழன்று கொண்டிருக்கும். கதவுகளை திறந்து வைக்கும் போது, சூடான காற்று வெளியேறி அறை குளுமையாக மாறும்.
இரவில் ஜன்னல்களை திறந்து வையுங்கள்:
சூரியன் மறைந்த பின் குளியலறை ஜன்னல்களை இரவு முழுவதும் திறந்து வைத்துவிடுவது, அறையை குளுமையாக வைத்திருக்கும்.
எலக்ட்ரிக் பொருட்களின் பயன்பாடுகளை குறைக்கவும்:
எலக்ட்ரிக் பொருட்களை பயன்படுத்தும் போது, அதிலிருந்து வெப்பம் வெளிவரும். இதனால் குளியலறை சூடாக இருக்கும். எனவே அவற்றின் பயன்பாடுகளை முடிந்தவரை குறைக்கவும்.