வெறும் பத்தே நாட்களில் யூரிக் அமில அளவுகளை குறைக்க உதவும் மேஜிக் பொருள்!!!
Author: Hemalatha Ramkumar5 September 2024, 4:25 pm
நமது உடலானது கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலையை போல தான். ஒரு தொழிற்சாலையில் தொடர்ச்சியாக பல்வேறு இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருப்பதைப் போல நம் உடலில் தொடர்ச்சியாக பல உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு தொழிற்சாலையை எப்படி கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டுமோ அதைப்போல தான் நமது உடலையும் நாம் தொடர்ச்சியாக நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது பல்வேறு பிரச்சனைகளை விளைவிக்கும்.
உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் நீங்கள் போதுமான அளவு உறக்கம் பெற்று, நன்றாக சாப்பிட்டு, தண்ணீர் பருக வேண்டும். அதே நேரத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். இவ்வாறு நீங்கள் செய்யும் பொழுது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இன்றைய பிசியான காலகட்டத்தில் ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் தொடர்ந்து அதிகரித்து உடலில் பல்வேறு விதமான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இது இறுதியில் யூரிக் அமிலம் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலில் ப்யூரின் அளவுகள் அதிகரிக்கும் பொழுது மட்டுமே யூரிக் அமிலம் அதிகரிக்கிறது.
உலர்ந்த பீன்ஸ், பருப்பு வகைகள், மது பானங்கள், பட்டாணி மற்றும் பீர் போன்றவற்றை சாப்பிடுவதால் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. தினமும் பியூரின் சாப்பிடுவதால் நமது உடலில் யூரிக் அமில அளவுகள் கூடுகிறது. நம் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பொழுது அது பல்வேறு விதமான அறிகுறிகளை ஏற்படுத்தும்.
மூட்டு வலி, விரல் வலி, கால் வலி, இடுப்பு வலி, கை வலி, மணிக்கட்டு வலி போன்ற அறிகுறிகள் அனைத்தும் யூரிக் அமில அளவுகள் அதிகரிப்பதால் ஏற்படுகிறது. மோசமான வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலமாகவும் ஒரு சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலமாகவும் யூரிக் அமில அளவுகள் அதிகரித்ததால் ஏற்பட்ட அறிகுறிகளிலிருந்து ஒருவர் பத்தே நாட்களில் நிவாரணம் பெறலாம்.
அப்படி என்றால் யூரிக் அமில அளவுகளை குறைப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது? வெள்ளரிக்காய் சாற்றுடன் சீரகப் பொடியை கலந்து குடிப்பது உடலை வலிமையாக்க உதவுகிறது. இந்த சாறு யூரிக் அமில அளவுகளை கட்டுப்படுத்துகிறது. இந்த சாற்றைப் பருகும் அதே நேரத்தில் நீங்கள் உங்கள் டயட்டில் புரோட்டின் உணவுகளை குறைக்க வேண்டும்.
நமது உடலில் யூரிக் அமிலம் அளவுகள் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று அதிகப்படியான உடல் கொழுப்பு. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கும் பொழுது யூரிக் அமில அளவுகள் அதிகரிக்காமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். மேலும் தினமும் அதிக அளவு வைட்டமின் சி ஊட்டச்சத்தை உணவுகள் அல்லது பானங்கள் மூலமாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக்கி யூரிக் அமில அதிகரிப்பால் ஏற்படும் அறிகுறிகளை குறைக்கிறது.