இந்த மாதிரி கிரீன் டீ குடிச்சா சுலபமா வெயிட் லாஸ் பண்ணிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
14 October 2022, 1:00 pm

கிரீன் டீ இல்லாமல் எடை குறைப்பு திட்டம் முழுமையடையாது. கிரீன் டீ பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. கிரீன் டீ உடல் பருமனின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் மோசமான ஆரோக்கியத்துடன் தொடர்புடைய அழற்சி பயோமார்க்ஸர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

கிரீன் டீயானது, குடலில் இருந்து இரத்த ஓட்டத்தில் நுழையும் நச்சு பாக்டீரியாக்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

கிரீன் டீ நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது உடல் பருமனை குறைக்கிறது. மேலும் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

எவ்வளவு கீரீன் டீ குடிக்க வேண்டும்?
கிரீன் டீயை சாதாரண தண்ணீரைப் போல அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. நாள் முழுவதும் சிறிது சிறிதாக உட்கொள்வது நல்லது.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!