கொடுத்தா சாப்பிட்டுகிட்டே இருக்கலாம் போல…உடைத்த சம்பா கோதுமை கேசரி…!!!

Author: Hemalatha Ramkumar
31 December 2024, 7:21 pm

பொதுவாக வீட்டில் ஏதாவது இனிப்பு செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது பெரும்பாலானவர்கள் சொல்வது கேசரி ஆக தான் இருக்கும் கேசரி வழக்கமாக ரவை சேமியா அல்லது சற்று வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று யோசிப்பவர்கள் அவள் வைத்து செய்வதுண்டு ஆனால் கேசரியை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு இன்று நாம் உடைத்த சம்பா கோதுமை வைத்து எப்படி கேசரி செய்யலாம் என்பதை பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

உடைத்த கோதுமை – 1 கப்

சர்க்கரை – 1.5 கப் 

நெய் – 5 டேபிள் ஸ்பூன் 

முந்திரி பருப்பு – 10 

ஏலக்காய் பொடி – சிறிதளவு 

கேசரி பொடி – தேவைப்பட்டால்

செய்முறை

*கோதுமை கேசரி செய்வதற்கு முதலில் ஒரு கப் உடைத்த கோதுமையை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து 3 முதல் 4 முறை நன்றாக தண்ணீர் ஊற்றி அலசி தூசு, கல், மண் அனைத்தையும் அகற்றி விட்டு சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும். 

*நெய் உருகியவுடன் நாம் சுத்தம் செய்து கழுவி வடிகட்டி வைத்துள்ள கோதுமையை சேர்த்து கிளறவும். 

*இதனை மிதமான தீயில் 4 முதல் 5 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளுங்கள். 

*இந்த சமயத்தில் ஒரு கப் உடைத்த கோதுமைக்கு 3 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். 

*தண்ணீர் நன்றாக கொதித்து வந்தவுடன் ஒரு மூடி போட்டு 5 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளலாம். 

இதையும் படிச்சு பாருங்க: ஸ்மூத்தி, ஷைனி கூந்தலுக்கு சிம்பிளான ஓவர்நைட் கற்றாழை ஹேர் மாஸ்க்!!!

*அடுத்து மூடியை அகற்றிவிட்டு தண்ணீர் வற்றும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள். 

*கோதுமை வெந்து வந்தவுடன் 1.5 கப் அளவு சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரைக்கு பதிலாக விருப்பப்பட்டால் நீங்கள் வெல்லம் சேர்த்தும் செய்யலாம். 

*இந்த கட்டத்தில் தேவைப்பட்டால் கேசரி பொடி சேர்த்துக் கொள்ளலாம். 

*இதே சமயத்தில் மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலை வைத்து 4 டேபிள் ஸ்பூன் அளவு நெய் ஊற்றி, நெய் உருகியவுடன் 10 உடைத்த முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து தயாராகிக் கொண்டிருக்கும் கேசரியில் கொட்டவும். 

*இறுதியாக வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து கேசரி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம். 

*அவ்வளவுதான் சுவையான கோதுமை கேசரி இப்போது தயார்.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 42

    0

    0

    Leave a Reply