வாரத்துக்கு இரண்டு முறை இத பண்ணா உங்க பற்கள் வெள்ளை வெளேரென ஜொலிக்கும்!!!
Author: Hemalatha Ramkumar17 October 2024, 1:11 pm
பற்களில் உள்ள மஞ்சள் கறை உங்களை சங்கடப்படுத்துகிறதா? ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதாலும், சுகாதாரமற்ற பழக்கங்கள் காரணமாகவும் பற்கள் மஞ்சளாக மாறுகிறது. பற்களை வெண்மையாக்குவதற்கு பலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் ஒரு சிலர் இயற்கை தீர்வுகளை விரும்புகின்றனர். அந்த வகையில் அடுப்புக்கரி என்பது பற்களை வெண்மையாக்குவதற்கு இயற்கையாக பயன்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டு பழமையான இந்த தீர்வு உங்கள் பற்களை வீட்டிலேயே இயற்கையான முறையில் வெண்மையாக்குகிறது. அடுப்புக்கரி பயன்படுத்தி உங்களுடைய பற்களை எப்படி வெண்மையாக்குவது என்பதை பார்க்கலாம்.
பொதுவாக காபி, டீ ,சோடா போன்ற ஒரு சில உணவுகளின் காரணமாக பற்களில் கறை ஏற்படலாம். புகைப்பிடித்தல் காரணமாகவும் பற்களின் நிறம் மாறலாம். மேலும் வயதாகும் பொழுது பற்களின் எனாமல் மெல்லியதாகி, அதன் அடியில் மஞ்சள் கரை படிய ஆரம்பிக்கும். மேலும் ஒரு சில மருந்துகளின் விளைவாகவும் பற்களின் வெண்மை மாறலாம்.
மோசமான வாய்வழி சுகாதாரம் அதாவது பற்களை சரியாக துலக்காதது மற்றும் ஃபிலாஸிங் செய்யாதது காரணமாக பற்களில் பிளேக் குவிந்து அதனால் பற்கள் அழுக்காகும். அடுப்புக்கரி என்பது வாயில் உள்ள pH அளவை சமநிலையாக்கி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை குறைத்து வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உணவு மற்றும் நமது உடலில் உள்ள நச்சுகள் மற்றும் அசுத்தங்களை அகற்றும் திறன் இந்த அடுப்புக்கரிக்கு உண்டு. ஆகையால் அடுப்புக்கரி பற்களில் உள்ள அழுக்குகளை உறிஞ்சி கொண்டு அதனை வெண்மையாகுகிறது. இப்போது அடுப்புக்கரியை பற்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: உங்க வீட்லயே இயற்கை கண்டிஷனர் இருக்கும்போது காசு கொடுத்து ஏன் கடையில வாங்கணும்…!!!
முதலில் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் டூத் பிரஷை தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள். பிறகு அதே ஈரமான டூத் பிரஷை அடுப்புக்கரியில் தொட்டு பற்களில் பொறுமையாக தேய்க்கவும். அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். பொறுமையாக இரண்டு நிமிடங்களுக்கு தேயுங்கள். பின்னர் எப்பொழுதும் போல தண்ணீர் வைத்து வாயை கொப்பளிக்கவும். உங்களுடைய வாயில் அடுப்புக் கரியின் எந்த ஒரு துகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பயன்படுத்துவது போதுமானது. அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் பற்கள் மற்றும் எனாமலில் சேதம் ஏற்படலாம். அடுப்புக்கரி ஆனது பற்களில் உள்ள அழுக்கை போக்குவது மட்டுமல்லாமல் வாயில் உள்ள துர்நாற்றம் மற்றும் நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.