தலைமுடிக்கு தேவையான அம்புட்டு பொருளும் வீட்ல இருக்கும்போது நம்ம ஏன் வெளியில அலையணும்!!!
Author: Hemalatha Ramkumar21 December 2024, 10:32 am
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிப்பது முதல் வறட்சி மற்றும் பொடுகை விரட்டுவது வரை தேங்காய் எண்ணெய் நம்முடைய தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த பொருளாகும். தேங்காய் எண்ணெய் மயிர்க்கால்களுக்கு போஷாக்கு வழங்கி, அவற்றை வலுவாக மாற்றுகிறது. தேங்காய் எண்ணெயில் அதிக அளவு வைட்டமின் E மற்றும் K, தேவையான கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பொடுகை எதிர்த்து போராடுவதற்கும் தலைமுடி மெலிந்து போவதை குறைப்பதற்கும் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு ஏற்ற ஒரு சூழலை அமைத்துக் கொடுப்பதற்கும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெய் என்பது பொடுகு, தலைமுடி மெலிந்து போதல் அல்லது வறண்ட மயிர்கால்களை சரி செய்வதற்கான இயற்கையான தீர்வாக அமைகிறது. சிறந்த மாய்சரைசராக செயல்படுவது மட்டுமல்லாமல், இது பூஞ்சை மற்றும் மாசுபடுத்திகளை அகற்றுவதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. எனவே உங்களுடைய தலைமுடியை ரிப்பேர் செய்து, தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, பொடுகை குறைப்பதற்கு இயற்கையான தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்குகள் சிலவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்
ஒரு ஸ்பூன் தேனை இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயோடு கலந்து இந்த மாஸ்கை நீங்கள் தயார் செய்ய வேண்டும். இதனை லேசாக சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் உங்களுடைய தலைமுடியில் சமமாக தடவி, மயிர்க்கால்களில் மசாஜ் செய்யவும். 1/2 மணி நேரம் ஊற வைத்த பிறகு ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசவும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை
ஃபிரெஷான கற்றாழை சாறு 2 டேபிள் ஸ்பூன் எடுத்து 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயோடு நன்றாக கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் கற்றாழை ஜெல்லை மிக்சியில் ஒரு முறை அரைத்து எடுத்து பிறகு தேங்காய் எண்ணெயோடு கலந்து கொள்ளலாம். இந்த கலவையை உங்களுடைய மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு வழக்கமான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி தலைமுடியை அலசவும். இது மயிர்க்கால்களை சமநிலை செய்து, பொடுகை குறைத்து, தலைமுடி வளர்ச்சிக்கான சிறந்த சூழலை உருவாக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
இந்த ஹேர் மாஸ்க்கை செய்வதற்கு நீங்கள் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயோடு சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். பிறகு இந்த கலவையை தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பின்னர் ஷாம்பு செய்ய வேண்டும். இந்த ஹேர் மாஸ்க் மயிர்க்கால்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதன் மூலமாக தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் தேயிலைமர எண்ணெய்
5 துளிகள் தேயிலை மர எண்ணெயோடு 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். 1/2 மணி நேரம் ஊற வைத்துவிட்டு மைல்டான ஷாம்பு வைத்து தலைமுடியை அலசவும். இந்த மாஸ்க் ஆரோக்கியமான தலைமுடிக்கு தேவையான ஆரோக்கியமான மயிர்க்கால்களை ஊக்குவித்து பொடுகையும் விரட்டுகிறது.
இதையும் படிச்சு பாருங்க: மனித ஆயுளை அதிகரிக்கும் இரகசியங்கள்!!!
தேங்காய் எண்ணெய் மற்றும் அவகாடோ
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயோடு பாதி அளவு பழுத்து மசித்த அவகாடோ பழத்தை சேர்த்து மயிர்க்கால்கள் மற்றும் தலைமுடியில் தடவவும். 1/2 மணி நேரம் ஊற வைத்த பிறகு ஷாம்பு வைத்து அலசுங்கள். உடைந்து போகும், வறண்ட தலை முடிக்கு இது ஒரு சிறந்த ஹேர் மாஸ்க். மேலும் இது பிளவு முனைகளை குறைப்பதற்கும் உதவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.