இன்று உடல் பருமன் என்பது ஒரு காய்ச்சல் தலைவலி போன்ற ஒரு சாதாரணமான பிரச்சனை ஆகிவிட்டது. உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்ற நோக்கில் பலரும் பல விதமான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் சில பலனளித்தாலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஆகவே நாம் உடல் எடையை குறைக்க முயற்சிக்க தேர்வு செய்யும் தீர்வுகள் நம் உடலை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். நம் வீட்டில் கிடைக்கக்கூடிய எளிய பொருட்களை வைத்து உடல் எடையை குறைப்பது பலனளிக்கும். அந்த வகையில் வெந்தயம் என்பது உடல் எடையை குறைத்து நம் உடலை ஃபிட்டாக வைப்பதற்கு பெரிதும் உதவக்கூடியது.
அதுமட்டுமல்லாமல் வெந்தயத்தில் இன்னும் ஏராளமான பலன்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தை தொடர்ந்து எடுத்து வருவதன் மூலமாக உடல் எடையை நாம் குறைத்து விடலாம்.
இரவு தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த
வெந்தயம் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வேண்டும். இந்த தண்ணீரை காலையில் வடிகட்டி பருகுங்கள். இது உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் அகற்றி விரைவாக உடல் எடையை குறைக்க உதவும்.
வெந்தைய தண்ணீர் மட்டுமல்லாமல் வெந்தயத்தை டீயாகவும் தயார் செய்து குடிக்கலாம். இதுவும் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். வெந்தய டீ செய்வதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்து வரும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து, மீண்டும் கொதிக்க விடவும். நாம் சேர்த்த தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க விட்டு பின்னர் வடிகட்டி அதனை குடிக்கலாம். இதனை தினமும் வெறும் வயிற்றில் காலையில் பருக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர உடல் எடை குறையும்.
வெந்தய டீ அல்லது வெந்தய தண்ணீர் இரண்டும் செய்ய முடியாத நபர்கள் நேரம் கிடைக்கும் பொழுது வெந்தயத்தை அரைத்து பொடியாக வைத்துக்கொள்ளலாம். அந்த பொடியில் சிறிதளவு எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வர உடல் எடை விறுவிறுவென வேகமாக குறைந்து விடும்.
வெந்தயத்தோடு நாம் தேனும் சாப்பிடுவதால் இது நமது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
This website uses cookies.