ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் என்பதே பெரும் தொல்லையாக இருக்கும் போது, அதனுடன் சேர்ந்து வரும் வலியானது கொடுமையிலும் கொடுமை. இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மாதவிடாயின் போது அதிக வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிக்காத சிலர் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும்.
எனினும், மாதவிடாய் வலி உள்ளவர்கள் வலியில் இருந்து விடுபட ஒரு சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம். இவற்றில் வெந்நீர் பை உபயோகிப்பது, டார்க் சாக்லேட் சாப்பிடுவது, லேசான உடற்பயிற்சிகள் செய்வது போன்றவை அடங்கும். இப்போது மாதவிடாய் வலிக்கான சிறந்த வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. இரண்டு சிறிய இஞ்சி துண்டுகள் எடுத்து, அதனை உரித்து நசுக்கவும். இரண்டு கிளாஸ் தண்ணீர் கொண்ட ஒரு பாத்திரத்தில் நறுக்கிய இஞ்சியைச் சேர்க்கவும். இஞ்சி கொண்ட தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இஞ்சியை வடிகட்டி, பிறகு தேநீர் வடிவில் தண்ணீரைக் குடிக்கவும். மாதவிடாய் வலி ஏற்படும் போது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கவும்.
2. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸ் தண்ணீரில் இதனை சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதனை நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் சாப்பிடலாம் அல்லது ஒவ்வொரு உணவிற்கும் பிறகு சாப்பிடுங்கள்.
3. மாதவிடாய் வலிக்கு இஞ்சியை உரித்து அரைக்கவும். அதன் சாற்றை வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து உட்கொள்ளவும்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.