இந்த ஒரு பொருள் இருந்தா வீட்டிலயே நரைமுடிக்கு நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
4 December 2024, 3:51 pm

நமக்கு வயதாகும் பொழுது இயற்கையான செயல்முறையின் ஒரு பகுதியாக நரைமுடி ஏற்படுவது என்பது ஒரு பொதுவான விஷயம் தான். ஆனால் இளநரை என்பது நாம் பின்பற்றும் மோசமான வாழ்க்கை முறைகளின் காரணமாக ஏற்படுகிறது. எனினும் அதிர்ஷ்டவசமாக மருதாணி பல நூற்றாண்டுகளாக இயற்கையான ஹேர் டை ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை பண்புகள் நிறைந்த மருதாணி செயற்கை சாயங்களுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.

இது தலைமுடிக்கு நிறத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல் அதனை வலுவாக மாற்றி தலைமுடிக்கு இயற்கை பளபளப்பை சேர்க்கிறது. மருதாணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு தேவையான ஆழமான போஷாக்கை வழங்கி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்களுடைய இளநரை பிரச்சனைக்கு தீர்வு பெறுவதற்கு மருதாணியை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான 4 எளிய வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

மருதாணி, எலுமிச்சை மற்றும் காபி 

ஒரு இயற்கை ஹேர் மாஸ்க்கை தயாரித்து உங்களுடைய நரைமுடியை போக்குவதற்கு மருதாணியுடன் எலுமிச்சை சாறு மற்றும் காபியை கலந்து பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் ஒரு கப் மருதாணி பொடியில் 1/2 கப் எலுமிச்சை சாறு மற்றும் 1/4 கப் காபி டிகாஷன் சேர்க்க வேண்டும். இதனை உங்களுடைய தலைமுடியில் தடவி தடவுங்கள். குறிப்பாக உங்களுடைய மயிர்கால்களில் தடவுவதற்கு மறந்து விட வேண்டாம். தடவிய பிறகு 2 மணி நேரம் ஊறவைத்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.

மருதாணி மற்றும் கற்றாழை 

மருதாணி மற்றும் கற்றாழை நரைமுடியில் இருந்து விடுபடுவதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது. இந்த ஹேர் மாஸ்கை தயாரிப்பதற்கு ஒரு கப் மருதாணி பொடியுடன் 1/2 கப் கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்துங்கள். நரைமுடி மீது தடவி 2 முதல் 4 மணி நேரம் ஊற வைத்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரால் தலைமுடியை அலசுங்கள். இது நரைமுடி பிரச்சனைக்கு தீர்வு தருவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

இதையும் படிக்கலாமே:  கால்சியம் கம்மியா இருந்தா வாழ்க்கை முழுவதும் ரொம்ப கஷ்டப்படணும்… அதனால இந்த குறைபாட்டை கண்டுபிடிப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!!!

மருதாணி, நெல்லிக்காய் மற்றும் தயிர்

நெல்லிக்காயில் உள்ள அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து மயிர்க்கால்களை வலிமையாக்கி அதன் நிறத்தை மேம்படுத்துகிறது. இதனால் இது நரைமுடிக்கு இயற்கையான ஒரு தீர்வாக அமைகிறது. இந்த ஹேர் மாஸ்கை தயார் செய்வதற்கு ஒரு கப் மருதாணி பொடியுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து பேஸ்டாக கலந்து தலைமுடியில் தடவ வேண்டும். ஒரு சில மணி நேரங்கள் காத்திருந்த பிறகு தலைமுடியை அலசுங்கள்.

மருதாணி மற்றும் தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக இது தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கி, ஒரு கண்டிஷனர் போல செயல்பட்டு அதனை பாதுகாக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்கை தயார் செய்வதற்கு நீங்கள் மருதாணி பொடியுடன் தேங்காய் எண்ணெயை கலந்து உங்களுடைய தலைமுடி மற்றும் மயிர் கால்களில் தடவ வேண்டும். 2 மணி நேரங்கள் கழித்து கழுவி விட உங்களுக்கு கருமையான மற்றும் பளபளப்பான கூந்தல் கிடைக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Ajith Kumar Vidaamuyarchi release date விடாமுயற்சி படத்தின் புது அப்டேட் வந்தாச்சு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
  • Views: - 117

    0

    0