மீதமான ஒன்றிரண்டு காய்கறிகளை வைத்து இத்தனை அசத்தலான டிஷ் செய்யலாமா…???

Author: Hemalatha Ramkumar
24 December 2024, 12:35 pm

ஒரு சில நேரங்களில் ஒன்று இரண்டாக மீந்துபோன காய்கறிகளை ஃப்ரிட்ஜில் அப்படியே வைத்திருந்து இறுதியாக வீசி விடுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் சிறிய முயற்சியின் மூலமாக இந்த மீந்துபோன காய்கறிகளை சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவாக மாற்றலாம். மேலும் இதனை செய்வதற்கு அதிக நேரமும் எடுத்துக் கொள்ளாது. மிகவும் விரைவாக எந்த காய்கறி மீந்திருந்தாலும் அதை வைத்து உங்களால் உணவை தயார் செய்ய முடியும். இதன் மூலமாக நீங்கள் பணத்தை சேமிப்பதோடு காய்கறிகள் வீணாவதையும் தடுக்கலாம். இந்த காய்கறிகள் உணவின் சுவை ஊட்டச்சத்து மற்றும் அமைப்பை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் மீந்து போன காய்கறிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதற்கான சில வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

இதமளிக்கும் சூப் வகைகள் 

சூப் தயாரிப்பதற்கு நீங்கள் மீந்து போன காய்கறிகளை பயன்படுத்தலாம். குடைமிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவை இதற்கு சிறந்த ஆப்ஷன்களாக இருக்கும். காய்கறிகள் அனைத்தையும் வெட்டி ஏற்கனவே நீங்கள் தயார் செய்து வைத்துள்ள சூப் பேஸ் உடன் சேர்த்து காய்கறிகளை சாஃப்டாக வேகவைத்து எடுக்கும் பொழுது காய்கறிகள் உடைய ஃபிளேவர் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

காய்கறி ப்ரை

விரைவான அதே நேரத்தில் முழுமையான உணவை சமைப்பதற்கு இந்த ஃப்ரை ஒரு நல்ல ஆப்ஷன். குடைமிளகாய், ப்ராக்கோலி, காளான் மற்றும் பிற மீந்த காய்கறிகளை மசாலா சேர்த்து சிறிய அளவு எண்ணெயில் வறுத்தெடுத்து சாப்பிடலாம்.

இதையும் படிச்சு பாருங்க: இந்த மாதிரி பழக்க வழக்கங்கள் இருக்கவங்களுக்கு தொப்பை கொழுப்பு வரது உறுதி!!!

காய்கறி ஆம்லெட் 

முதலில் 2 முதல் 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனை தோசை கல்லில் ஊற்றி பிறகு அதன் மீது மீந்து போன காய்கறிகளை பொடியாக நறுக்கி மிளகுத்தூள், உப்பு சேர்த்து ஆம்லெட் தயாரிக்கலாம். இதற்கு நீங்கள் கீரை வகைகளை கூட பயன்படுத்தலாம். இந்த ஆம்லெட் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

வெஜிடபிள் கட்லெட் 

மீந்து போன பல்வேறு வகையான காய்கறிகளை வைத்து நீங்கள் வெஜிடபிள் கட்லெட் செய்து சைடிஷ் ஆகவோ அல்லது தின்பண்டமாகவோ அல்லது சாண்ட்விச்சில் வைத்து கூட சாப்பிடலாம். இதற்கு நீங்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட் போன்றவற்றை முட்டை, பிரெட் தூள் போன்றவற்றில் கலந்து செய்ய வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…