இந்தியாவில் கோடைகாலம் துவங்கி விட்டதால் வெப்பநிலை 40°C-க்கும் அதிகமாக நிலவி வருகிறது. இந்த அதிகரித்த வெப்பநிலை நம்மை வாட்டி வதைத்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். வெயிலில் வேலைக்கு செல்வது ஒரு சவாலான காரியமாக அமைகிறது. ஒரு சில மணி நேரங்களிலேயே சோர்ந்து விடுகிறோம். வெப்பத்திலிருந்து உடலை பாதுகாத்து அதனை குளிர்ச்சியாக வைப்பது வெயில் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். இல்லை எனில் இது சோர்வு, தலைவலி மற்றும் வேலையில் கவன குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வெயில் காரணமாக நீங்களும் சட்டென்று சோர்வாகி விடுகிறீர்கள் என்றால் உங்களுக்கான டிப்ஸ் சில இதோ:-
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்களை சோர்ந்து போக விடாமல் பாதுகாக்கும். ஆகவே தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் பருக மறுக்காதீர்கள்.
நீங்க அலுவலகத்தில் வேலை செய்யும் நபராக இருந்தால், அலுவலகத்தை விட்டு வெளியே சென்று சிறிது நேரம் இயற்கையான காற்றை சுவாசிக்கவும். இது உங்கள் உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்த உதவும்.
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடுவது உங்கள் ஆற்றல் அளவுகளை அதிகரித்து வேலையில் சுறுசுறுப்பாக செயல்பட உதவும். பழங்கள், நட்ஸ் வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவும் ஒரு சில ஸ்நாக்ஸ் வகைகள் ஆகும்.
வெயிலுக்கு ஏற்றவாறு உடைய அணிந்து கொள்ளுங்கள். காற்று எளிதாக உள்ளே சென்று வெளியே வரக்கூடிய காட்டன் ஆடைகளையும், தளர்வாக இருக்கக்கூடிய ஆடைகளையும் அணியவும். இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்.
வேலையில் இருந்து அவ்வப்போது பிரேக் எடுப்பது உங்கள் ஆற்றல் அளவுகளை மீட்டெடுக்க உதவும். ஒரு சில நிமிடங்கள் அங்கும் இங்குமாக நடப்பது உங்களுக்கு ஓரளவு ஓய்வு கொடுக்கும்.
காபி குடிப்பது உங்களுக்கு உடனடி ஆற்றலை கொடுத்தாலும், அது உங்கள் ஒட்டுமொத்த நாளையே பாழாக்கி விடும். ஆகவே முடிந்த அளவு காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்க்கவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.