புற்றுநோயை உண்டாக்கும் டாட்டூக்கள்… எச்சரிக்கையா இருந்துக்கோங்கப்பா!!!
Author: Hemalatha Ramkumar30 November 2024, 11:08 am
இன்று டாட்டூக்கள் போட்டுக் கொள்வது ட்ரெண்டாக மாறிவிட்டது. ஆனால் டாட்டூக்கள் போடுவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்ற கேள்வி எழுகிறது. டாட்டூக்கள் போடுவதால் கேன்சர் உட்பட பல தீவிரமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதால் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்திய ஒரு ஆய்வில் கூட டாட்டூக்களில் போட பயன்படுத்தப்படும் இன்குகளில் கேன்சரை உருவாக்கும் பொருட்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் எதிர்வினைகளை ஏற்படுத்தும் பொருட்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே டாட்டூக்கள் போடுவதால் ஏற்படும் நீண்ட கால விளைவுகள் அதிலும் குறிப்பாக கேன்சர் விளைவுகள் குறித்து ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பெரும்பாலான டாட்டூ இன்குகளில் காரீயம், மெர்குரி மற்றும் காட்மியம் போன்ற நச்சு மிகுந்த கன உலோகங்கள் காணப்படுகின்றன. இந்த பொருட்கள் அலர்ஜி விளைவுகள் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி ஒரு சில சூழ்நிலைகளில் கேன்சரை உண்டாக்கும் பொருட்களாக மாறுகின்றன. சிவப்பு இன்குகள் இந்த மாதிரியான சிக்கல்களை அதிக அளவில் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில டாட்டூ பிக்மென்டுகளை சூரிய கதிர்களுக்கு வெளியிடுவதால் தீங்கு விளைவிக்கும் துணைப் பொருட்கள் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. UV கதிர்களால் டாட்டூ இன்குகளை உடைத்து அவற்றை நச்சுப் பொருட்களாக மாற்ற முடியும். இதனால் சரும புற்று நோய் உண்டாவதற்கு வாய்ப்புள்ளது. டாட்டூவில் உள்ள பிக்மென்ட்கள் லிம்பாட்டிக் அமைப்பால் உறிஞ்சப்பட்டு அதனால் நாள்பட்ட உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். நிணநீர் கணுக்களில் சேகரிக்கப்படும் இந்த பிக்மென்ட்கள் வீக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கின்றன.
இதையும் படிக்கலாமே: மீந்து போன தோசை மாவில் அசத்தலான ருசியில் முட்டை பணியாரம்!!!
மேலும் டாட்டூக்களில் உள்ள நானோ துகள்கள் டாட்டூக்களில் இருந்து நிணநீர் கணுக்களுக்கு நகர்ந்து அவற்றில் வீக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாட்டூக்களை சரியான முறையில் போடாவிட்டால் அது ரத்தத்தில் பாக்டீரியா அல்லது வைரஸ்களை ஏற்படுத்தலாம். நாள்பட்ட தொற்றுகள் அல்லது வீக்கம் இருப்பது பாதிக்கப்பட்ட திசுக்களில் புற்றுநோயை உண்டாக்கும்.
முறையாக ஸ்டெரிலைஸ் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்தி போடப்படும் டாட்டூக்கள் காரணமாக ஹெப்பாட்டிட்டிஸ் C மற்றும் HIV போன்றவை ஏற்படலாம். டாட்டூக்களில் உள்ள பிக்மென்ட்கள் ஒரு சில நபர்களில் அலர்ஜி விளைவுகளை உண்டாக்கலாம். தொடர்ச்சியாக இந்த அலர்ஜி விளைவுகள் ஏற்படும் பொழுது அது நாள்பட்ட வீக்கத்திற்கு வழிவகுத்து, இறுதியில் கேன்சர் உருவாக காரணமாகிறது. இந்த மாதிரியான அலர்ஜி விளைவுகளை கருப்பு மற்றும் சிவப்பு இன்குகள் ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் கிடைக்கும் டாட்டூ இன்குகள் பாதுகாப்பானவையாக இல்லை. இந்த சீரமைக்கப்படாத இன்குகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கேன்சர் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. ஒரு சில உடல் நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு டாட்டூ தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. குறைவான நோய் எதிர்ப்பு சக்தி அல்லது மரபணு காரணமாகவும் புற்றுநோய் ஏற்படலாம். எனவே டாட்டூக்கள் போடுவதற்கு முன்பு தோள் நிபுணர் அல்லது புற்றுநோய் நிபுணரை ஆலோசித்து அவர்களுடைய பரிந்துரையை பின்பற்றுவது மிகவும் அவசியம்.
டாட்டூக்கள் என்பது தற்போது பிரபலமாக பயன்படுத்தப்பட்டாலும் அவற்றில் உள்ள உடல்நல அபாயங்களை நாம் அலட்சியமாக கருதக்கூடாது. எனவே டாட்டூக்கள் உடனான உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் அழகானதாகவும் மாற்றுவதற்கு அது குறித்த அபாயங்களில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.