தற்போது நாம் குளிர்காலத்தில் இருக்கும் இந்த சமயத்தில் நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான இந்த குளிர்ந்த வானிலை நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதால் இது உண்டாகிறது. நம்முடைய உடல் செயல்பாடு குறைந்து, உணவு சாப்பிடும் பழக்க வழக்கங்களும் மாறும் காரணத்தாலும் அதிக அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதுமே இதற்கு காரணம்.
தமனிகள் சுருங்கி இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இயல்பு நிலைக்கு மாறுபட்ட ரத்த உறைதல் ஏற்படுகிறது. மேலும் குளிர்காலத்தில் பொதுவாக ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் மற்றும் அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் அதனால் ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் ஏற்படலாம்.
குளிராக இருக்கும் பொழுது ஆரோக்கியமான வெப்பநிலையை பராமரிப்பதற்கு இதயம் அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது. இந்த குளிரில் இதயத்தின் குழாய்கள் மற்றும் ஒட்டுமொத்த உடலின் குழாய்கள் சுருங்கி வெப்பநிலையை தக்கவைக்கின்றன. மேலும் அட்ரினலின் என்ற மன அழுத்த ஹார்மோன் வெளியாகிறது. அதிக ரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதால் நம்முடைய உடலை நாம் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் போது ரத்த நாளங்கள் சுருங்காது மற்றும் ரத்த அழுத்தமும் உயராது.
யார் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்?
ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இதயத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி ஆரோக்கியமான உடல் எடை மற்றும் தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கலாம். இந்த குளிர்காலத்தில் ஓடுதல் பயிற்சியில் ஈடுபட வேண்டாம். ஏனெனில் இந்த சமயத்தில் இதயம் அதிக அளவு வேலை செய்து ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும். இது ஹார்ட் அட்டாக் ஏற்பட வழிவகுக்கலாம். எனவே உங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு யோகா மற்றும் வாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
இதையும் படிக்கலாமே: ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும் திராட்சை சாறு…!!!
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கியமான ஒரு அறிகுறி என்பது நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அல்லது வலி. எனினும் ஒரு சில பெண்கள் குறிப்பாக மூச்சு விடுவதில் சிரமம், குமட்டல், வாந்தி அல்லது சோர்வு போன்ற அறிகுறிகளையும் அனுபவிக்கின்றனர்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.