தயிர் என்பது இந்திய சமையலறையில் ஒரு பிரதான உணவு பொருளாக அமைகிறது. புளிக்க வைக்கப்பட்ட இந்த பாலில் இருந்து எடுக்கப்படும் உணவுப் பொருளில் புரோட்டின், கால்சியம் மற்றும் ப்ரோ-பயோடிக்கள் நிறைந்து இருப்பதால் ஆரோக்கியமான டயட்டுக்கு இது ஒரு சிறந்த உணவாக அமைகிறது. செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த அழுத்தத்தை குறைப்பது போன்ற தயிரின் பயன்கள் ஏராளம். உடலை குளுமைப்படுத்தும் பண்புகள் நிறைந்த தயிர் வயிற்றை ஆற்றி மனதையும் அமைதிப்படுத்துகிறது.
வயிற்று உப்புசம், வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகின்றனர். எனினும் இவர்கள் தங்களுடைய அன்றாட டயட்டில் தயிரை சேர்த்து வர செரிமான ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில் செரிமான பிரச்சனைகளை தவிர்த்து ஆரோக்கியமான குடலை பெறுவதற்கு தயிரோடு நீங்கள் கலந்து சாப்பிட வேண்டிய எளிமையான சில பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சீரகம்
தயிரோடு சீரகப் பொடி கலந்து சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். சீரகத்தில் இயற்கையான செரிமான பண்புகள் இருப்பதால் இது வயிற்று உப்புசம் மற்றும் வாயுவை போக்குகிறது. அதே நேரத்தில் தயிரில் உள்ள ப்ரோ-பயோடிக்கள் ஆரோக்கியமான குடலை பராமரிக்கிறது. இந்த இரண்டும் இணைந்து செரிமான அமைப்பை அமைதிப்படுத்தி, வீக்கத்தை குறைக்கிறது.
புதினா இலைகள்
தயிருடன் ஒரு சில புதினா இலைகளை சேர்த்து சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கும். புதினாவில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அஜீரணத்தை போக்கி, குமட்டல் மற்றும் இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. தயிர் குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. குளிர்ச்சி தரும் இந்த 2 பொருட்களுமே வயிற்றை அமைதிப்படுத்தி, வீக்கத்தை குறைத்து, செரிமானத்தை சுமுகமானதாக மாற்றுகிறது.
இதையும் படிக்கலாமே: பெருசா செலவு எதுவும் பண்ண மாட்டேன்… ஆனா நேச்சுரல் குலோ வேணும்னு கேட்கறவங்களுக்கு இந்த பொருள் கரெக்ட்டா இருக்கும்!!!
கருப்பு மிளகு
செரிமானத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் தயிரோடு கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடலாம். கருப்பு மிளகில் உள்ள பைப்பரின் என்ற பொருள் செரிமான நொதிகளை தூண்டி, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகப்படுத்துகிறது. அதே நேரத்தில் தயிரில் உள்ள ப்ரோ-பயோடிக்கள் ஆரோக்கியமான குடல் அமைப்பை பராமரிக்கிறது. இந்த காம்பினேஷன் வயிற்று உப்புசம், வயிற்று வலி மற்றும் அஜீரணத்தை போக்கி, செரிமான செயல்முறையை சீராக்குகிறது.
கல் உப்பு
தயிரோடு கல் உப்பு சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கையான மற்றும் பயனுள்ள தீர்வாக அமையும். கல் உப்பில் காணப்படும் மினரல்கள் செரிமான நொதிகளை தூண்டுகிறது. இந்த இரண்டும் இணைந்து ஆரோக்கியமான செரிமானத்தை தருகிறது.
பெருங்காயம்
பெருங்காயத்தில் உள்ள ஆக்டிவ் காம்பவுண்டுகள் வயிற்று உப்புசம், வாயு தொல்லை மற்றும் அஜீரணத்திலிருந்து நிவாரணம் தருகிறது. இதனை தயிரோடு சேர்த்து சாப்பிடும் பொழுது செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வீக்கம் குறைந்து, செரிமான செயல்முறை சிறப்பாக நடைபெறும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
This website uses cookies.