நைட் தூங்கும்போது இந்த மாதிரி அறிகுறி இருந்தா அது டயாபடீஸ் பிரச்சினையா கூட இருக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
17 October 2024, 6:06 pm

ஒரு சில பிரச்சனைகள் வெகு விரைவாக மனிதர்களை ஆட்கொண்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் டயாபடீஸ். இதுபோன்ற சூழ்நிலையில் டயாபடீஸ் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பெரும்பாலான நேரங்களில் டயாபடீஸ் பிரச்சனை என்பது மோசமான வாழ்க்கைமுறை காரணமாக ஏற்படுகிறது. இந்த சமயத்தில் நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம். டயாபடீஸ் பிரச்சனையை முற்றிலுமாக குணப்படுத்த முடியாவிட்டாலும் அதன் அறிகுறிகளை அடையாளம் காண்பதன் மூலமாக நிச்சயமாக அதனை கட்டுப்படுத்தலாம்.

நமக்கு டயாபடீஸ் இருக்கும்போது நமது உடலானது அதனை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சில அறிகுறிகளை காட்டும். அவற்றை நாம் அலட்சியமாக கருதக்கூடாது. ஆரம்பித்தில் டயாபடீஸ் பிரச்சனைக்கான குறிப்பான அறிகுறிகள் தென்படாவிட்டாலும் நமது உடலில் பல சிறு சிறு அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இந்த அறிகுறிகளை வழக்கமான விஷயங்களாக கருதி கடந்து விடுகிறோம். ஆனால் அது நம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக மாறிவிடுகிறது. அதன் அறிகுறிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தென்படும். அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

கால்களில் கிச்சுகிச்சு மூட்டும் உணர்வு
ஒரு சிலருக்கு இரவு நேரத்தில் கால்கள் மரத்துப் போவது அல்லது கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு ஏற்படும். ஒருவேளை இந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கு டயாபடீஸ் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இது அதிக ரத்த சர்க்கரை காரணமாக ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: மாதவிடாய் வலியை போக்க மருந்துகளை எடுக்கலாமா…???

அதிகப்படியான வியர்வை

ஒரு சிலருக்கு ஏசி மற்றும் கூலரில் இருந்தால் கூட அதிகப்படியாக வியர்க்கும். ஒருவேளை தொடர்ச்சியாக நீங்கள் இந்த பிரச்சினையை அனுபவித்து வந்தால் உங்களுடைய குளுக்கோஸ் அளவை ஒரு முறை சோதித்துப் பார்ப்பது நல்லது. ஏனெனில் இது டயாபடீஸ் பிரச்சனைக்கான மிக முக்கியமான ஒரு அறிகுறி.

அசௌகரியமாக உணர்வது
தூங்கும்போது ஏதோ ஒரு வித அசௌகரியத்தை உணர்வது சில நேரங்களில் வழக்கமான ஒன்றாக இருந்தாலும் தொடர்ச்சியாக இது உங்களுக்கு ஏற்பட்டால் நிச்சயமாக அதனை நீங்கள் கவனிக்க வேண்டும். இது அதிக ரத்த சர்க்கரை அளவு காரணமாக உண்டாகலாம். இந்த சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

வாயில் வறட்சி
பல நேரங்களில் இரவு நேரத்தில் வாயானது வறண்டு போகலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் அதனை கவனித்து விடுவது நல்லது. தூங்கும் போது வறண்ட வாய் மற்றும் அதிகப்படியான தாகம் ஆகிய இரண்டுமே டயாபடீஸ் பிரச்சனைக்கான அறிகுறி.

அதிகப்படியாக சிறுநீர் கழித்தல்
டயாபடீஸ் வந்துவிட்டால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இதனால் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இந்த அறிகுறி நமது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அறிவுறுத்துகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!