சர்க்கரை நிறைய சாப்பிட்டா சர்க்கரை நோய் வருமா… டயாபடீஸ் பற்றிய கட்டுக் கதைகள்!!!

Author: Hemalatha Ramkumar
18 November 2024, 3:22 pm

டயாபடீஸ் என்பது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் அதிகரித்து வரும் ஒரு நாள்பட்ட நிலையாகும். இந்தியாவில் மட்டுமே மில்லியன் கணக்கான நபர்கள் இந்த டயாபடீஸ் பிரச்சனையுடன் வாழ்க்கையை கழிக்கின்றனர். நம்முடைய கணையத்தால் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலை அல்லது உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை நமது உடலால் திறமையாக பயன்படுத்த முடியாத ஒரு நிலையே டயாபடீஸ். இந்த நாள்பட்ட நிலையானது நம்முடைய உடலில் உணவு ஆற்றலாக மாற்றப்படுவதை பாதிக்கிறது. இந்தப் பிரச்சினையை ஒழுங்காக சமாளிக்காவிட்டால் அதனால் மோசமான விளைவுகள் ஏற்படலாம். மேலும் அது வகை 1 அல்லது வகை 2 நீரழிவு நோய்க்கு வழிவகுக்கலாம். 

ஆனால் சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் டயாபடீஸ் ஏற்படும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது உண்மையா மற்றும் டயாபடீஸ் சம்பந்தமான மேலும் சில கட்டுக் கதைகள் மற்றும் உண்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கட்டுக்கதை 1: சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் டயாபடீஸ் வருமா? 

உண்மை: இல்லை, டயாபடீஸ் என்பது உணவு அல்லது வாழ்க்கை முறை மூலமாக ஏற்படுவது அல்ல. எனினும் உடல் பருமன் அல்லது அதிக உடல் எடை கொண்ட நபர்களுக்கு டயாபடீஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிக சர்க்கரை நிறைந்த உணவு என்பது அதிக கலோரி நிறைந்த உணவாக அமைகிறது. அதிகப்படியான கலோரிகள் காரணமாக ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கலாம். எனவே சர்க்கரை சாப்பிடுவது நேரடியாக டயாபடீஸ் பிரச்சனையை ஏற்படுத்தாது. 

கட்டுக்கதை 2: டயாபடீஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம். 

உண்மை: டயாபடீஸ் என்பது ஒரு நாள் பட்ட நிலையாகும். துரதிஷ்டவசமாக, இதனை ஒருபோதும் உங்களால் குணப்படுத்த இயலாது. ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வது டயாபடீஸை கையாளுவதற்கு உதவுமே தவிர அதிலிருந்து முற்றிலுமாக உங்களால் விடுபட முடியாது. வகை 1  டயாபடீஸ் பிரச்சனைக்கு வாழ்க்கை முழுவதும் இன்சுலின் சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு தேவைப்படுகிறது. டயாபடீஸுக்கு எந்த ஒரு மருந்தும் கிடையாது. மருத்துவர் வழிகாட்டுதல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் வழக்கமான ஹெல்த் செக்கப் மூலமாக டயாபடீஸ் காம்ப்ளிகேஷன்களை உங்களால் தவிர்க்க முடியும்.

இதையும் படிக்கலாமே: தினமும் காலை இந்த 4 விஷயங்களை தவறாம செய்து வந்தாலே ஆரோக்கியம் உங்க கைய விட்டு எங்கேயும் போகாது!!!

கட்டுக்கதை 3: டயாபடீஸ் நோயாளிகள் பழங்கள் மற்றும் இனிப்புகளை சாப்பிடவே கூடாது. 

உண்மை: வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். இதனால் முற்றிலுமாக இனிப்புகளை உங்களுடைய உணவில் இருந்து அகற்ற வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. சிறிய அளவுகளில் நீங்கள் அவற்றை அவ்வப்போது சாப்பிடலாம். ஒரு சில பழங்களை நீங்கள் தினசரி அடிப்படையில் கூட சாப்பிடலாம். இது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு நீங்கள் பதிவு செய்யப்பட்ட ஒரு உணவு நிபுணரை அணுகுவது அவசியம். 

கட்டுக்கதை 4: டயாபடீஸ் ஒரு தொற்றுநோய்  

உண்மை: ஒரு சில நபருக்கு ஏன் டயாபடீஸ் ஏற்படுகிறது என்பதை குறிப்பிட்டு நம்மால் சொல்லாமல் போனாலும் டயாபடீஸ் என்பது ஒரு தொற்றுநோய் கிடையாது. சளி அல்லது காய்ச்சல் போல இதனை மற்றவர்களிடமிருந்து நம்மால் பெற இயலாது. இது ஒரு வாழ்க்கை முறை நோயாகும். 

கட்டுக்கதை 5: டயாபடீஸ் ஒரு தீவிரமான பிரச்சனை கிடையாது. 

உண்மை: ஒவ்வொரு வருடமும் மார்பக புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் ஆகிய இரண்டையும் சேர்த்து ஏற்படும் இறப்புகளை விட டயாபட்டீஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. டயாபடீஸ் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்பை இரண்டு மடங்கு அதிகரிக்கும். எனினும் டயாபடீஸை முறையாக கட்டுப்பாட்டில் வைத்து வந்தால் அது தொடர்பான சிக்கல்களை உங்களால் தவிர்க்க முடியும். 

கட்டுக்கதை 6: டயாபடீஸ் நோயாளிகள் ஸ்பெஷல் டயட்டை பின்பற்ற வேண்டும். 

உண்மை: டயாபடிக் உணவு என்ற ஒன்று கிடையாது. மற்றவர்களைப் போலவே ஆரோக்கியமான சரிவிகித உணவை சாப்பிட்டால் போதுமானது. மெலிந்த புரதம், காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய சரிவிகித உணவு அனைவருக்கும் மற்றும் சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களுக்கும் சிறந்த உணவாக இருக்கும்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!