ஆரோக்கியம்

என்னது… முதுகு வலி ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியா…???

ஹார்ட் அட்டாக் என்ற உடனே முதலில் நம்முடைய ஞாபகத்திற்கு வருவது மோசமான நெஞ்சு வலி மற்றும் அசௌகரியம் தான். ஆனால் முதுகு வலி கூட ஹார்ட் அட்டாக்கின் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? முதுகு வலி என்பது மிகவும் பொதுவான ஒரு விஷயமாக பலர் கருதுகின்றனர். ஆனால் அது ஒரு சில நேரங்களில் மோசமான  பிரச்சனைகளுக்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது என்ன மாதிரியான முதுகு வலி ஏற்படும், மேலும் அதனை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் போது அவருடைய இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள் அடைக்கப்படுகிறது. இது உடலின் பல உறுப்புகளை பாதித்து முதுகில் வலியை ஏற்படுத்தும். இந்த வலி பொதுவாக தொடர்ச்சியான வலியாக இருக்கும். பல சமயங்களில் மக்கள் இதனை தசை வலி அல்லது சோர்வின் காரணமாக இருக்கலாம் என்று கருதி அலட்சியமாக இருந்து விடுகின்றனர். 

இதையும் படிக்கலாமே: வெஜிடேரியன் கறி தோசை: இந்த மாதிரி தோசை சாப்பிட்டே இருக்க மாட்டீங்க!!!

ஒருவேளை இந்த வலி நெஞ்சு, இடது தோள்பட்டை அல்லது கழுத்துக்கு பரவும் போது அது ஹார்ட் அட்டாக்கிற்கான ஒரு அறிகுறியாக அமைகிறது. 

ஹார்ட் அட்டாக்கின் பிற அறிகுறிகள் 

நெஞ்சில் இறுக்கம் அல்லது கனமான ஒரு பொருளை வைத்தது போன்ற உணர்வு 

இடது தோள்பட்டை, கழுத்து அல்லது தாடையில் வலி 

மூச்சு விடுவதில் சிக்கல் 

அதிகப்படியான வியர்வை 

மயக்கம் 

வாந்தி 

ஹார்ட் அட்டாக்கை தவிர்ப்பதற்கான டிப்ஸ் ஆரோக்கியமான உணவு: பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட உணவை உங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொள்ளவும். ஜங்க் ஃபுட் மற்றும் ஃப்ரைட் உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். 

உடற்பயிற்சி: வழக்கமான உடற்பயிற்சி செய்வது உங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நடைபயிற்சி, யோகா அல்லது ஏதோ ஒரு வித உடற்பயிற்சியை தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்காவது செய்யுங்கள். 

மன அழுத்தத்தை தவிர்க்கவும் 

மன அழுத்தம் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான மிகவும் முதன்மையான ஒரு காரணமாக அமைகிறது. எனவே மெடிடேஷன் அல்லது பிற மனதை அமைதிப்படுத்தும் நுட்பங்களை பின்பற்றுவதன் மூலமாக உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். 

புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்

இந்த இரண்டு பழக்கங்களுமே இதய நோய்களை ஏற்படுத்தும். எனவே இவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது. 

வழக்கமான ஹெல்த் செக்கப் 

உங்களுடைய கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை அவ்வப்போது சோதித்துப் பார்ப்பது அவசியம். ஒருவேளை முதுகு வலியுடன் சேர்த்து உங்களுக்கு வேறு ஏதாவது அறிகுறிகள் இருந்தால் அதனை அலட்சியப்படுத்த வேண்டாம். அவை ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். அதற்கு நீங்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம். 

எனவே எப்பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

10 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

11 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

11 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

12 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

12 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

12 hours ago

This website uses cookies.