பக்கவாதத்தில் இருந்து மீண்ட பின் அதிக தீவிரம் கொண்ட  உடற்பயிற்சிகளை செய்யலாமா…???

Author: Hemalatha Ramkumar
8 அக்டோபர் 2024, 5:57 மணி
Quick Share

பக்கவாதம் ஏற்பட்டவர்கள் அதனால் உண்டாகிய தாக்கங்களிலிருந்து விரைவில் மீண்டு வருவதற்கு உடற்பயிற்சி முக்கிய பங்கு கொண்டுள்ளது. தொடர்ச்சியாக மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது இதற்கு உதவும். பக்கவாதம் ஏற்படும் பொழுது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. இதனால் மூளையின் இயல்பான செயல்பாடுகள் சேதமடைகிறது. 

உடற்பயிற்சி செய்யும் பொழுது மூளை இழந்த அதன் செயல்பாடுகளை மீண்டும் துவங்குவதற்கான உந்துதலை பெறுகிறது. தொடர்ச்சியாக மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது பயனுள்ளதாக அமைந்தாலும் ஒரு நிமிட தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது குணமடையும் காலத்தை குறைக்கும் என்று சமீபத்தில் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

ஸ்டேஷனரி பைக் ஓட்டுவது, ட்ரெட்மில் பயன்படுத்துவது, பாடிவெயிட், கெட்டில் பெல், தம் பெல் அல்லது ஜம்பிங் ரோப் போன்ற அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளில் ஒருவர் ஈடுபடலாம். பக்கவாதத்திற்கு பிறகு வழக்கமான முறையில் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதை விட 19 நிமிடங்களுக்கான ஹை இன்டர்சிட்டி இன்டர்வெல் ட்ரைனிங் (HIIT) ஈடுபடுவது குணமடையும் காலத்தை குறைத்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சியில் ஈடுபடும் பொழுது இதயம் சம்பந்தப்பட்ட குணமடைதல் விரைவாக்கப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த வகையான உடற்பயிற்சிகள் இதயம் மற்றும் நுரையீரலின் திறனை மேம்படுத்துவதோடு அவற்றில் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இது மூளை விரைவில் குணமடைவதற்கு மிகவும் அவசியம். 

எனினும் இந்த மாதிரியான அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள் அனைவருக்கும் ஏற்றது அல்ல. மோசமான இதய சம்பந்தப்பட்ட நோய்கள் அல்லது பக்கவாதத்திற்கு பிறகு உடல் இயல்பு நிலைக்குத் திரும்பாதவர்கள் ஆகியோர் இந்த வகையான உடற்பயிற்சிகளை கட்டாயமாக செய்யக்கூடாது. பக்கவாதத்திற்கு பிறகு நடமாட்டத்திற்கு மாறியவர்கள் மற்றும் மருத்துவர் ரீதியாக நிலையாக கருதப்படுபவர்கள் மட்டுமே அதிக தீவிர உடற்பயிற்சி மூலமாக பலனடையலாம். 

மேலும் படிக்க: காலையில எழுந்திருக்கும் பொழுதே சோம்பேறித்தனமா இருக்குதா… அதுக்கு உங்களோட இந்த கெட்ட பழக்கம் தான் காரணம்!!!

பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்த நோயாளிகள் எந்தவிதமான உடற்பயிற்சி, குறிப்பாக அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். மேலும் முதல் சில நாட்களுக்கு நிபுணர்களின் பார்வையின் கீழ் உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஆரம்பத்தில் குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சியோடு ஆரம்பித்து பொறுமையாக அதன் தீவிரத்தை அதிகரிக்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • இனி விமர்சனம் அதிகமாகும்.. விஜய் கடிதம்
  • Views: - 126

    0

    0