HMPV கொரோனா வைரஸ் போன்றதா… இது பரவுமா… அனைத்து கேள்விகளுக்கான பதில் இதோ!!!

Author: Hemalatha Ramkumar
7 January 2025, 6:51 pm

ஹியூமன் மெட்டா நிமோவைரஸ் (HMPV) என்ற சுவாச வைரஸ் தொற்று நம்முடைய மேல் மற்றும் கீழ் சுவாச அறைகளை பாதிக்கிறது. மருத்துவ ரீதியாக, ஹியூமன் மெட்டா நிமோ வைரசுக்கும் ரெஸ்பிரேட்டரி சின்சியல் வைரஸ் (RSV) அல்லது இன்ஃப்ளூயன்சா வைரஸுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்று கூறப்படுகிறது. இவற்றிற்கு இடையே உள்ள ஒரே ஒரு வேறுபாடு இந்தியாவில் இன்ஃப்ளூயன்சா வைரஸுக்கு தடுப்பூசி உள்ளது. அதே நேரத்தில் மெட்டா நிமோ வைரஸுக்கு தடுப்பூசி இல்லை. கூடிய விரைவில் RSV -கான தடுப்பூசி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

HMPV வைரஸுக்கான அறிகுறிகள் கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் போலவே உள்ளது. மீண்டும் இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு என்பது தடுப்பூசிகள் மட்டுமே. கோவிட் வைரஸுக்கான தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்கிறது. ஆனால் HMPV-க்கு தடுப்பூசிகள் இல்லை.

HMPV வைரஸுக்கு தற்போது எந்த ஒரு சிகிச்சை முறைகளும் கிடையாது. இதற்கான பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல். ஒரு சில நோயாளிகள் கீழ் சுவாச அறை தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களுக்கு வீசிங் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நேரம் காலம் பாராமல் அடிக்கடி கிரீன் டீ குடிப்பவர்கள் கவனத்திற்கு!!!

குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நபர்களுக்கு HMPV வைரஸ் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் உள்ளது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், டயாலிசிஸ் செய்து வருபவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு இந்த தொற்று மிக எளிதாக ஏற்படலாம்.

இதற்கான எளிதான தடுப்பு நடவடிக்கைகளை நம்முடைய வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளலாம். HMPV தொற்றை தடுப்பதற்கு தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, மாஸ்குகளை பயன்படுத்துவது, கைகுட்டைகளை பயன்படுத்துவது போன்றவை அமையும். இவை அனைத்துமே கோவிட் சமயத்தில் ஆலோசிக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள். இப்போதைக்கு HMPV வைரஸுக்கு எந்த ஒரு சிகிச்சையும் இல்லை என்பதால் தொற்று ஏற்படாமல் தடுப்பது மட்டுமே நம்முடைய கையில் இருக்கும் ஆயுதம்.

HMPV வைரஸை மிக எளிதாக மல்டிபிளக்ஸ் PCR மூலமாக கண்டுபிடித்து விடலாம். பிற சுவாச தொற்றுகளிடமிருந்து இதனை வேறுபடுத்துவது அவ்வளவு சவாலான விஷயம் கிடையாது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?